உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி ஈட்டிகள் தாங்கிப் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தனர். ஒரு புறத்தில் பஞ்சம் மிரட்டிக் கொண்டிருக்கும் போது இன்னொரு புறத்தில் இருக்கின்ற விளைச்சலையும் பன்றிக் கூட்டம் பாழ்படுத்துவதைக் கண்டு மாயவர் துடித்துப் போனார்! "அடப் பாவமே! என்ன அநியாயம்? தலையூர் நாட்டில் இந்தப் பயிர்களைப் பாதுகாக்கக் கூட ஆள் இல்லையா?' மாயவர், அங்கலாய்த்தது கண்ட வீரமலை, அவரைப் பார்த்து. எதிரியின் நாடுதானே... எக்கேடு கெட்டால் என்ன? "என் றான். - "அப்படிச் சொல்லாதே வீரமலை! அரசு நமக்கு எதிரியாக இருக்கலாம் எல்லா மக்களும் நம் மக்களே! அவர்களின் உயிர்வாழ்வுக்கான ஒளடதமல்லவா இந்தப் பயிர் -இதனைப் பன்றிகள் அழிக்கின்றன. - இந்தக் கொடுமையை வேடிக்கை பார்ப்பதா? உடனே அந்தப் பன்றிகளை விரட்டுங்கள்!' மாயவர் ஓங்கிச் சப்தம் போட்டார்! ரத வண்டியை நிறுத்தச் சொல்லி. அவரும் கீழே இறங்கி - பன்றிகளை விரட்டினார். பன்றிகள் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கவே ஆத்திரப் பட்ட மாயவர் அவைகளை நெருங்கிச் சென்றார். அப்போதும் பன்றிகள் பயந்தோடவில்லை. அந்தச் சமயம் அங்குள்ள ஒரு பெரிய புதரிலிருந்து பயங்கரமான ஒரு ஒலி கேட்டது. பூசாரி செம்பகுலனின் ஒலிதான் அது. அந்தப் பன்றிகளை வெறி கொள்ளச் செய்வதற்கு அவன் வழக்கமாக எழுப்பும் ஒலி! அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று மாயவர் ஆச்சரியத் துடன் திரும்பிப் பார்ப்பதற்குள் பன்றிக் கூட்டம் அவர்மீது ஒருசேரப் பாய்ந்துவிட்டது. காளி மன்னனின் வளர்ப்புப் பன்றி மாயவரை ஒரு முட்டு முட்டிக் கீழே தள்ளியது. சற்றும் எதிர்பாராத நிலையில் மாயவரின் வாள் கீழே விழுந்து விடவே, அவர் தனது கரங்கள் கொண்டே அந்தப் பன்றி களோடு போரிட்டார். மாயவருக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ட வீரமலை பன்றிக் கூட்டத்தில் பாய்ந்து தனது வாளால் பல பன்றிகளின் குடலைக் கிழித்தும் - தலையைப் பிளந்தும் மாய வரைக் காப்பாற்றுவதற்காக அவர் அருகே சென்று விடத் துடித்தான். அவனைப் பின்பற்றி அவர்களுடன் வந்த இரண்டு வீரர்களும் குதிரை மீதமர்ந்தவாறே பன்றிகள் சிலவற்றின் மீது ஈட்டிகளைப் பாய்ச்சிக் கொன்றனர். ஆனால் தொடர்ந்து செம்பகுலன் புதர் மறைவில் இருந்து உசுப்பல் ஒலியை எழுப் 409