உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "சபாஷ்! சபாஷ்! செம்பகுலா, சரியாகச் சொன்னாய்! என்று கலகலவென சிரித்துக்கொண்டே வடிவழகியின் ஆடை நழுவியிருந்த தோளை ஒரு கடி கடித்தான் மாந்தியப்பன். அந்த இரண்டு காட்டுப் பன்றிகளும் செத்து விட்டனவா? நமது திட்டம் நிறைவேறி விட்டதா? வடிவழகியின் மடியை விட்டெழுந்து மாந்தியப்பன் அந்த அறைக்குள் நடனமாடத் தொடங்கிவிட்டான். "இதோ... நீ செய்த அபூர்வமான காரியத்துக்கு இவளையே இன்றிரவு பரிசாக ஏற்றுக் கொள்!" என்று கத்தினான்! செம்பகுலன் அந்தப் பரிசு கண்டு பல் இளிப்பவனாகத் தெரியவில்லை. "பெண் தேவையில்லை எனக்கு! எனது ஆசையெல்லாம் பொன்! பொன்! அதைக் கொடுங்கள் போதும்!" எனப் பல்லை இளித்தான். மாந்தியப்பன் ஒருக்கணம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்துவிட்டு, செம்பகுலனின் தோளைத் தட்டியவாறு. 'நமது திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்து விட் டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டம் ஆரம்பமாக வேண்டும்" எனக் கூறியவன் வடிவழகியைப் பார்த்து நீ சற்று நேரம் வெளியில் இரு! நானும் செம்பகுலனும் தனித் துப் பேசவேண்டும்! என்றான். அவளும் இடையை நெளித்து அபிநயநடை போட்டுக் கொண்டு அடுத்த அறைக்குக் கிளம்பி னாள். அப்போதும் மாந்தியப்பன் அவளை விடாமல் இறுக் அணைத்து முத்தமழை பொழிந்து பிறகு அவளை அந்த அறைப் பக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டு வந்தான். செம்பகுலன், மாந்தியப்பனிடம், செல்லாத்தாக் கவுண்ட ரய்யா என்ன சொன்னார்? எனக்குச் சேர வேண்டிய பொன்னை என் வீட்டில் சேர்த்தாகி விட்டதா?" எனக் கேட்டான். - .. 'அதெல்லாம் அப்போதே கொண்டு போய்க் கொடுத்தாகி விட்டது. இதோ அப்பாவின் யோசனைப்படி அடுத்த வேலை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வேலையைத் திறமையாக முடிப்பதற்காக அச்சாரமாக நூறு பொன்னை முடிந்து கொடுத்துப் போயிருக்கிறார்". 414