உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "புரியும்படி சொல்வதற்காக என் தந்தை தனது மாளி கையில் காத்துக் கொண்டிருக்கிறார். இதை எடுத்துக் கொண்டு அவரிடம் இப்போதே போ! அவர் எல்லாம் சொல்வார்!' மாகதம்! மாணிக்கம்! வைரம்! தங்கம்! இவ்வளவு விலை உயர்ந்த பொருளை என்னை நம்பிக் கொடுக்கிறீர்களே. எனக்கே என்னை நம்ப முடியவில்லையே!' - ஆமாம் மிக விலை உயர்ந்த பொருள்தான்! உன்னை நம்பித்தான் கொடுக்கிறோம் அப்பாவிடம் போனால் அதற் - கான விளக்கம் உனக்குக் கிடைக்கும்! - - இதைச் சொல்லிக்கொண்டே மாந்தியப்பன் மரகதப் பச்சை மாணிக்கக் கிளியை வைரமிழைத்த தங்கக் கூண்டுடன் வெள் ளிப் பேழையில் வைத்து அந்தப் பேழையை ஒரு மரப் பேழையில் மூடி அதைத் தூக்கி, செம்பகுலனிடம் கொடுத் தான். அவனும் அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி னான். அவன் போவதைப் பார்த்துக்கொண்டே மற்றொரு அறையிலிருந்த வடிவழகி, அவன் போய் விட்டான் என்பதை அவனது குதிரையின் குளம்படி ஓசையின் மூலம் தெரிந்து கொண்டு மாந்தியப்பன் இருந்த அறைக்கு ஆடி அசைந்து வந்து சேர்ந்தாள். அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளி விட்டான். அவளோ அவனையும் இழுத்துக்கொண்டு படுக் கையில் வீழ்ந்தாள். - மாலைப்பொழுது வானத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண் டிருந்தது. கருமை, வெண்மை, மஞ்சள், சிகப்பு எனப் பல நிறங்களில் தோய்த்தெடுத்த பஞ்சுப்பொதிகளை வாரி இறைத் தது போல மேகங்கள் விண்ணில் ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த வேளையில்தான் மாயவரின் உடலைச் சுமந்து கொண்டு வளநாட்டின் ரத வண்டி, தலையூர்க்கோட்டை வாயிலில் நுழைய முற்பட்டது! அந்த வண்டியை யார் பார்த்தாலும் உயிரற்ற ஒரு உடல் கிடத்தப் பட்டிருப்பதாக நினைக்க மாட் டார்கள். மாயவர் அசதிமிகுதியினால் ரதத்தில் தூங்கிக் கொண் டிருப்பது போலவே காணப்பட்டார். காயம் பட்டுச் சோர்ந்து போயிருந்த அந்த வீரனையும் ரதவண்டியில் காணவில்லை. ரதவண்டியை ஓட்டுகிறவன் மற்றும் வீரமலை இருவர் மட்டுமே இருந்தனர். - 416