உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் மலைக்கொழுந்தாக் கவுண்டரும் ஈடுபட்டிருந்த போதிலும் அவசரத்தில் ஒன்றிரண்டு வழக்கமான சடங்குகள் முன்னும் பின்னுமாகவே நடந்தேற வேண்டியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் திருமணத்தில் ஏற்பட்ட திடீர்த் திருப்பந்தான் என் பதை விழா காண வந்திருந்தோர் அனைவரும் உணர்ந்தே யிருந்தனர். அருமைக்காரர் மணமகள் தாமரை நாச்சியை கிழக்கு முக மாகவும், அவளை நோக்கிய நிலையில் மணமகன் நெல்லியங்கோடனை மேற்கு முகமாகவும் நிறுத்தி வைத்து மாலை மாற்றிக் கொள்ளச் செய்தனர். கங்கணம் அகற்றிய பிறகு, அருமைப்பெரியோர் கொடுத்த மங்கல நாணை மிகுந்த பவ்யத்துடன் வாங்கி, மங்கல ஒலி முழங்கிடும் பந்தலில் தாமரை நாச்சியின் கழுத்தில் நெல்லியங்கோடன் கட்டினான். குடிமகன் என்போன் பாடத் தொடங்கிய மங்கல வாழ்த்துப் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. மணமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தவராக மலைக்கொழுந் தாக் கவுண்டரிடமும், பெருமாயி அம்மாளிடமும் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார்கள். பெருமாயி அம் மையின் கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத் தோடிக் கொண்டிருந்தது. மலைக்கொழுந்தாக் கவுண்டரின் உள்ளத்தில் எத்தகைய எண்ண அலைகள் மோதுகின்றன என் பதை அறிவிக்க இயலாத ரசம் போன கண்ணாடியாக அவரது முகம் தோற்றமளித்தது.தாய் தந்தையர் காலில் விழுந்து வணங்கிய தாமரையாள், தன் சகோதரன் சின்னமலைக்கொழுந்தின் காலில் விழுவதற்கு அவனருகே சென்ற போது - அதுவரை யில் அரைகுறை மனத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் டிருந்த சின்னமலைக் கொழுந்து பலநூறுபேர் பந்துமித்திரர் கள் குழுமியிருக்கிற பந்தலில் இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்க இயலாதவனாக ஆத்திரம் தொண் டையை அடைக்க; "சீ! அடங்காப்பிடாரி!" என உரக்கக் கத்தி விட்டு புயலைப் போன்ற வேகத்தில் வெளியேறினான். இனிய சூழலில் இருந்த அந்த மணவிழாப் பந்தலை ஒரு பயங் கர சோகம் கப்பிக் கொண்டு விட்டது; சின்னமலைக்கொழுந் துவின் அந்தச் சீற்றம் எங்கு போய் முடியுமோ என்ற கவலை யில் பெருமாயி அம்மாள், "பெரியகாண்டியம்மா நீ தான் துணை! என்று வாய்விட்டுக் கதறிவிட்டாள். F 34