உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநி யுத்த தர்மம்! அதைக்கூடத் தலையூரில் படித்திருக்கிறீர்களா? அதைப் படித்துக் கிழித்த பலன் தான் பாதி வழியில் பன் றியை விட்டு எங்கள் பண்பாளர் மாயவரைக் கொலை செய்யத் தூண்டியதோ? உண்மையை உணர முடியாமலும் உணர்த்துவதற்கு முயன்றாலும் அதை ஏற்காமல் திரும்பத்திரும்பச் சொன்ன தையே சொல்லிக் கொண்டிருப்பதும் நேரத்தை வீணாக்கு வதில்தான் போய் முடியும்! இனிப் பேச்சில்லை! வீரமலை யைக் கொண்டு போய் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் வளநாட்டுத் தளபதி என்கிற மரியாதைக்கு இம்மியளவு குறை வும் வராமலும் சிறையில் வையுங்கள்!' .. காளி மன்னன் கட்டளையை ஏற்று மெய்க்காப்பாளர்களும் தலையூர் வீரர்களும் வீரமலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். காளி மன்னா! இதுதான் உன் கடைசி ஆணையாக இருக் கும்! நான் அடைபடப்போகும் சிறையில் நீ அடைபடு வதற்கான நாள் அதிக தூரத்தில் இல்லை! என்று வீரமலை ஒலித்தது அந்த அரண்மனைச் சுவர்கள் அனைத்தையும் அதிரச் செய்தது. தலையூர்க் காளியோ பதில் ஏதும் கூறாமல் - வீரமலையை வீரர்கள் அழைத்துக்கொண்டு போவதையும் அவன் ஏறு போல் மிடுக்குடன் நடந்து செல்வதையும் கூர்ந்து கவனித்துக் கொண் டிருந்தான். அவனது பார்வையிலிருந்து வீரமலையும் வீரர் களும் மறைந்த பிறகு அவன் மிகுந்த வேதனையுடன் சோகம் ததும்பிய முகத்தினனாக மாயவர் உடலிருக்கும் ரதவண்டி யிடம் வந்தான். சற்றுத்தொலைவில் முத்துமாலையுடன் தட் டேந்தி நின்றவனை ஜாடைகாட்டி அருகழைத்தான். தட்டில் இருந்த முத்து மாலையை மீண்டும் கையில் எடுத்தான். மாய வரின் நிலை கண்டு அவன் கரத்திலிருந்த முத்தாரம் மீண்டும் தட்டுக்குச் சென்றபோது இருந்த வேகம் இப்போது இல்லை. சோக இழையோடும் பின்னணியில் அந்த முத்துமாலையை மாயவரின் கழுத்தில் அணிவித்தான். அவன் விழிகளில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்ற மனக்குழப்பத்தில் அவன் தள்ளாடித் தடுமாறினான். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாமல் செயலற்றுப் போய்விட்டதாக அவன் உணர்ந்தான். 423