உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் முயற்சி 44 வெற்றி! மாந்தியப்பன், தலையூர்க்காளியிடம் ஓலையைப் பெற்றுக் கொண்டு வளநாடு நோக்கிப் புறப்படுவதற்குள்ளாகவே மர கதப் பச்சை மாணிக்கக் கிளியுடன் செம்பகுலன் வளநாட்டு எல்லையை மிதித்துவிட்டான். தலையூர்க் காளியம்மன் கோயில் பூசாரி செம்பகுலனாக அவன் தோற்றமளிக்கவில்லை. வேட்டை யாடுவதையே தொழிலாகக் கொண்ட வேடன் உருவில் அவன் தோற்றமளித்தான். தலையில் வேடர்கள் கட்டிக்கொள்ளும் உருமாலை! கழுத்தில் சங்குகள் கோக்கப்பட்ட மாலை! தோளில் தொங்கிய நிலையில் ஒரு வில்! மற்றொரு தோளில் அம்புக் கூடு! மரகதப்பச்சை மாணிக்கக்கிளியின் கூண்டு அடங்கிய வெள்ளிப் பேழையை மூடிக்கட்டப்பட்ட ஒரு துணி மூட்டை அவன் கையில் இருந்தது! தலையூரிலேயே அவனை யாராவது திடீரெனப் பார்த்தால் செம்பகுலன் என்று அடையாளம் காண இயலாது - அந்த அளவுக்குத் தன் தோற்றத்தை மாற் றிக்கொண்டு குதிரையை மிக வேகமாகத் தட்டி ஓட்டிச் சென்ற அவன், வளநாட்டு எல்லைப் பகுதி வந்ததும் குதிரையை விட் டிறங்கி, கானகத்திலிருந்து-நகர் நோக்கிச் செல்லும் ஒரு வேட னைப் போலவே கால்நடையாக வந்துகொண்டிருந்தான். - அவனுடைய உள்ளம் செல்லாத்தாக் கவுண்டர் சொல் லிக் கொடுத்திருந்த சூழ்ச்சித் திட்டங்களில் ஆழமாகப் பதிந் திருந்தது. முதல் கட்டமாக பொன்னரையும் சங்கரையும் பிரித்து வைப்பதற்கான சூழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும். அதற்குத் தனது திறமையை எப்படிக் காட்டுவது? பொன்னரும் சங்கரும் அரண்மனையில் இருந்தாலும் வெளியில் உலவச் சென்றாலும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை- அப்படிப்பட்டவர்கள் தலையூர் மீது போர் தொடுத்துவிட்டால் நிச்சயம் பிரிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு போருக்கு முன்பே அவர் களைப் பிரித்து வைக்கும் சூழ்ச்சியில்தானே தலையூரின் வெற் றியே இருக்கிறது. அந்த சூழ்ச்சி நிறைவேறுவதற்கு செல்லாத் தாக் கவுண்டர் வகுத்துக் கொடுத்துள்ள திட்டப்படியே முள் 429