உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொள்ளர்-சங்கர் தழுதழுத்த குரலில் திக்கித் திக்கி நடுங்கும் உடலுடன் அந்தக் கிழவன் பதில் அளித்தது சங்கருக்குத் திருப்தி தர வில்லை. பெரியவருக்கு எந்த ஊர் என்று நான் தெரிந்து கொள்ள லாமா? - 'அவசியம் தெரிய வேண்டுமோ? வெண்முடி என்ற ஊர்! அந்த ஊருக்குப் புறத்தேயுள்ள ஒரு குக்கிராமம்! அதையும் வெண்முடி என்றுதான் நாங்கள் அழைத்துக் கொள்வது வழக் கம் - எனக்கே தலையும் தாடியும் வெண்முடியல்லவா, அத னால் என் ஊரும் வெண்முடியென்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறதல்லவா?" " "நல்ல பொருத்தம்தான்! நான் தங்களிடம் கேட்கும் விபரம் முக்கியமானது! வளநாட்டிலிருந்து மாயவரும் வீரமலையும் தலையூருக்குச் செல்வது குறித்து தாங்கள் ஏதாவது கேள்விப் பட்டிருப்பீர்களே! 'ஆமாம் கேள்விப்பட்டேன்! எந்தச் செய்தியையும் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியே விட்டு விடுவேன். ஆனால் இந்தச் செய்தி கிடைத்தவுடன் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! இது என்னடா பெரிய கூத்தாக இருக்கிறது தலையூர்க் காளியையும் அவனருகே இருந்து அவனை ஆட்டிப் படைக்கிற செல்லாத்தாக்கவுண்டர், அவரது மகன் மாந்தியப்பன் ஆகியோரையும் பழிவாங்க சபதம் செய்து கொண்டிருக்கிற பொன்னர் சங்கர் என்ற புலிகள் எப்போது ஏன்-எப்படி புழுக்களாக மாறிவிட்டன? என்று ஆச்சரியப் பட்டேன்! ஆறாத்துயரமடைந்தேன்! பதவியென ஒன்று வந்து விட்டதால் வளநாட்டைப் பரிபாலிக்கும் வாய்ப்பு பெற்று விட்டதால் இனிமேல் அதை அனுபவித்தால் போதும், வீணாக வீரத்தைக் காட்டி துன்பத்தைச் சுமக்கத் தேவையில் லையென்ற முடிவுக்குப் பொன்னர் சங்கர் வந்து விட்டார்களே யென்று நினைத்து, அவர்கள்மீது நான் வைத்திருந்த மதிப்புக் காக எனக்கு நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்!" - - "பெரியவரே! நீங்கள் அப்படி நினைத்தால் அது பெருந் தவறு! பொன்னரின் வீரமோ, சங்கரின் வீரமோ பதவிகளுக் காக விலை போய்விடக் கூடியவை அல்ல! அழைப்பு அனுப் பியதே தலையூர்க்காளிதான்! என்னதான் பேசுகிறான் என் 440