உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் மணமக்கள். தங்களது தாய் தந்தையரின் பாதங்களில் நீர் ஊற்றிக் கழுவி, மலர்களைத்தூவி வணங்கிட வேண்டும் என் பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி! மணமகள் தாமரையாள், தனது தந்தை மலைக்கொழுந்தாக் கவுண்டருக்கும் தாயார் பெருமாயி அம்மாளுக்கும் பாதபூசை செய்து எழுந்தாள். நெல் லியங்கோடன் கண்களில் நீர் அருவியெனக் கொட்டிற்று. தன் தந்தை கோளாத்தாக் கவுண்டரும், தாய் பவளாத்தாளும் இல் லையே; இருந்து வாழ்த்தவில்லையே; அவர்களுக்குப் பாத பூசை செய்யும் பாக்கியத்தைத் தன்னால் பெற முடியவில் லையே என்ற ஏக்கம் - துக்கம் கணைகளென அவன் உள் ளத்தைத் துளைத்தெடுத்தன - நெல்லிவள நாட்டைச் செழுமை கொழிக்கும் பூமியாக மாற் றித் தனது செல்வாக்கைப் பரவலாக்கிக் கொடி கட்டி வாழ்ந்த கோளாத்தாக் கவுண்டரின் பிள்ளை; இப்போது நகைப்புக்கிட மான சூழ்நிலையில் நலிந்தும் மெலிந்தும் - அதனை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் வெட்கத்தால் தளர்ந்தும் நிற்ப தைச் சிந்தித்துப் பார்க்கும்போது: அவன் கண்கள் நீர்வீழ்ச்சி களாக மாறியதில் வியப்பிருக்க முடியாதல்லவா? மலைக்கொழுந்தாக் கவுண்டரையும். பெருமாயி அம்மாளை யும் கையெடுத்துக் கும்பிட்டு, "தாய் தந்தையை இழந்துவிட்ட எனக்கு இனிமேல் நீங்கள்தான் தாயும் தந்தையும்! என்று தழுதழுத்த குரலில் நெல்லியங்கோடன் கூறினான். மாமனா ரும் அத்தையும் மனங் கலங்கினர். பெருமாயி, எதுவும் பேச முடியாமல் இதயக்குமுறலை அடக்க முனைந்தது புரிந்தது. ஆனால்; தன்னைமீறி எல்லாம் நடந்துவிட்டதே என்ற உளைச் சலில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் மலைக்கொழுந்தாக் கவுண்டர் என்பதும் தெரிந்தது. மௌனமாகப் பெருமூச்சு விட்டபடியே பெருமாயி அம்மாள்; தனது மகள் தாமரை யைக் கட்டித் தழுவிக் கொண்டு அவளது கன்னங்களில்; காலைப் புல்லின் நுனிமீது கருக்கொண்டிருக்கும் பனித்துளி களைப் போல உருண்டு வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்துவிட்டாள். ஆனால் அதுவோ ஊற்றுப் பெருக்காயிற்று! அந்த நிலையிலுங்கூட மணவிழாவையொட்டிய சில சடங்கு களை உறவுப் பெண்டிரும், பெரியோரும் தங்குதடை வராமல் நடத்திக் கொண்டிருந்தனர். 36 மணமக்களுக்கென புதிதாகத் தயாரிக்கப்பட்ட காலணி