உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வெற்றி மிதப்பில் எல்லையற்ற இறுமாப்புடன், தலையூர் வீரர்களைப் பார்த்த மாந்தியப்பன். 'உம்! ஜாக்கிரதை! இவன் தப்பி விடக்கூடாது! தப்பிவிட முயற்சித்தால் இவன் தலை இவன் கழுத்தில் இருக்கக்கூடாது!" என்று உரக்கக் கத்திக் கூச்சலிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டகன்றான். அந்த மண்டபத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்த குதிரை. சங்கருக்கு உள்ளே ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டது போலும்! தன்னைக் கட்டியுள்ள இடத்தி லிருந்து எப்படியாவது அறுத்துக்கொண்டு வளநாடு போய்விட வேண்டுமென அது கருதியது!சங்கர் இல்லாமல் தனியாக தான் சென்றாலே, சங்கருக்கு ஏதோ ஆபத்து என்பதை வள நாட்டில் அனைவரும் புரிந்து கொள்வார்கள்! அதற்காக, அது கட்டவிழ்த்துக்கொண்டு ஓட பெருமுயற்சி செய்தது! இரவு முழுவதும் முயற்சித்தும் கூட அதனால் முடியவில்லை. 446