உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் பச்சை! கண்ணைப் பறிக்கும் மாணிக்கக் கல்! தகதகக்கும் தங்கம்!* - வேலப்பன் அலறி அழுதுவிட்டான் அந்த அபாரமான நடிப்பை உணர்ந்துகொள்ள இயலாத மூத்த பொற்கொல்லர். அது என்னவோ நீ அரசரிடம் கொடுத்த கிளியைப் பற்றி எமக்குத் தெரியாது! ஆனால் இந்தக் கிளி மரகதமுமல்ல மாணிக்கமுமல்ல வெறும் மண்ணாங்கட்டிக் கிளி!" என்று சிடுசிடுத்தார். வேலப்பன் அந்த அலங்காரக் கூடத்தின் உச்சியில் தலை முட்டிக் கொள்ளுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு எழும்பிக் குதித்தான். 16 'அரசே! ஒரு ராத்திரிக்குள் எப்படி என் கிளியை அபகரித் துக் கொண்டு, அதேமாதிரி ஒரு போலிக் கிளியைத் தயாரித்து என்னை ஏமாற்றப் பார்த்தீர்கள்?" .. "என்ன சொல்கிறாய் நீ? என்னைத் திருடன் என்றா சொல் கிறாய்? மோசக்காரன் என்றா மொழிகிறாய்? "சொல்லவில்லை அரசே! ஆனால் அப்படி நினைக்கும் படிச் செய்துவிட்டீர்களே! குன்றுடையார் குடும்பம் என்றால் பண்பாளர் குடும்பம் என்று கொடிகட்டிப் பறந்த காலம் போய் இந்தப் பரிதாபத்துக்குரிய வேடனின் பாபத்தைக் கொட்டிக் கொள்ளலாமா அரசே? "என் கோபத்தைக் கிளறாதே! நீ கொடுத்த கிளி இதுவே தான்!' .. "இல்லை அரசே இல்லை! என்னுடைய அசல் கிளியை மறைத்து விட்டுப் போலிக் கிளியைச் செய்து ஏமாற்றுகிறீர்கள்! அரசே! என்னை ஏமாற்றினாலும் பரவாயில்லை - பெரிய காண்டியம்மனுக்கு நான் செய்து கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாமல் வீணாகப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறீர்கள்! "வேடனே! அந்தப் பெரிய காண்டியம்மன் மீது சத்திய மாகச் சொல்லுகிறேன் இதுதான் நேற்று மாலை நீ என்னி டம் கொடுத்த கிளி!' - 'நானும் பெரிய காண்டியம்மன் சத்தியமாகச் சொல்லு கிறேன். நான் கொடுத்த கிளி வேறு இது வேறு!' - 450