உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 ஒரு 220 ருற்றியுள்ள ஜீவன் தங்கள் சூழ்ச்சித் திறனுக்கு ஒவ்வொரு கட்டமாக வெற்றி கிடைத்து வருகிறது என்பதை எண்ணி எல்லையிலா மகிழ்ச்சி யில் திளைத்துவிட்ட செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப் பனும் அந்த மகிழ்ச்சியை நிலத்தடி நீர் போல மறைத்துக் கொண்டு வெளியே வெடித்துக் கிடக்கும் பூமியைப் போல வேதனையை முகத்தில் தேக்கிக் கொண்டு தலையூர்க் காளி யிடம் இந்தப் பூனைகளும் பாலைக் குடிக்குமா என்பதுபோல வஞ்சக வலையை மிகச் சாதுர்யமாகப் பின்னத் தொடங்கினர். .. 'அரசே! தங்கள் மடலில் தாங்கள் தந்துள்ள விளக்கத்திற்கு மேலாக நானும் எவ்வளவோ விளக்கங்களை பொன்னரிட மும் சங்கரிடமும் அளித்தேன். போர் புரிந்து தலையூர்க் காளியை வீழ்த்தி விட்டுத் தலையூர் நாட்டைத் தரைமட்டமாக்கு வதைத் தவிர தங்களுக்கு வேறு குறிக்கோளே இல்லையென்று அந்த சங்கர் வாளையோங்கிக்கொண்டு என் மீது பாய்ந்தேவிட் டான். பொன்னர் பொல்லாதவனாக இருந்தாலும் பொறுமை யைக் கடைப்பிடிப்பவனைப்போல நடிப்பதில் கெட்டிக் கார னல்லவா. அதனால் அவன் சங்கரைத் தடுத்துவிட்டான். தூது வந்தவரைக் கொல்வது தர்மமல்ல என்று பாரதத்துத் தர் மனைப் போலத் தம்பிக்கு உபதேசம் செய்த அவன், தனக்கேயுரிய ராஜதந்திரத்தோடு என்னிடம் என்ன பேசி னான் தெரியுமா?" - - மாந்தியப்பனின் வார்த்தைகளில் சிலந்தி வலை எனத் தெரியாது சிக்கிக்கொள்ளும் பூச்சியைப் போல தலையூர்க் காளி மயங்கிவிட்ட காரணத்தால், 'என்ன பேசினான் அந்தப் பொன்னர்?" என்ன பேசினான்? என்று ஆவலுடன் கேட்டான். என்ன பேசினானா? அதைச் சொல்லவே எனக்கு நெஞ்சு : பதைக்கிறது! என்னைப் பற்றியும் அப்படி ஒருவனுக்கு நினைக் கத் தோன்றியதேயென்று பதறிப்போய் விட்டேன்! சொர்க்க 455