உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி டிருக்கிறது. பாறைகள் அடர்ந்த ஒரு இடத்தில் சிறியதோர் கால்வாயைத் தாண்டிச் செல்ல முனையும்போது, அந்தக் குதிரை கீழே விழுந்து முன்னங்கால்களில் இரத்தம் கசிகிறது! அதை அந்தக் குதிரை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஓடிக்கொண்டேயிருக்கிறது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு ஒன்று இருக்கிறது. அந்த ஆறாவது அறிவுக்குப் பதிலாக வாயில்லாப் பிராணிகள் சில நன்றி செலுத்தும் ஓர் உன்னதப் பண்பைப் பெற்றிருக்கின்றன அல்லவா; அதற்கு எடுத்துக் காட்டாகத்தான் அந்தக் குதிரை தனது கடமையைச் செய்திடத் துடித்தது. சில குறுகிய வழிகளில் அதனால் ஓட முடிய வில்லை.அடிபட்ட கால்களில் வலி வேறு குடைந்தெடுத்தது. இருந்தாலும் அந்த நன்றியுள்ள மிருகம் சோர்ந்து போய்விட வில்லை. ஓடிற்று.ஓடிற்று,ஓடிக் கொண்டேயிருந்தது. - வளநாட்டுக் கோட்டை முகப்பின் கொடி அசைவது குதிரை யின் கண்களுக்கு வெகு தொலைவிலேயே தெரிந்து விட்ட தால் - வந்து சேர வேண்டிய இடத்துக்கு வெகு விரைவிலேயே வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அதற்குண்டாயிற்று. ஆனால் அதன் உடல்நிலை அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு - வலியைப் பொறுத்துக் கொண்டு தனது பணியை முடித்த பிறகே கீழே விழ வேண் டும் என்று அது எண்ணிச் செயல்பட்டது. 2 பெரியகாண்டியம்மன் கோயிலைத் தாண்டி இரண்டொரு கல்தொலைவு சென்றால் வளநாட்டுத் தலைநகரின் எல்லையைத் தொட்டுவிடலாம். ஆனால் அம்மன் கோயில் அருகே வரும் பொழுதே குதிரையின் கால்கள் ஒன்றோடொன்று பின்னத் தொடங்கி விட்டன. சற்று நின்று பார்த்தது! பெரிய காண்டியம்மன் ஆலயத்தைக் கண்டதும் அதற்கு ஒரு புது யோசனை வந்தது போலும்! அந்தக் கோயிலை நோக்கி மெதுவாகத்தான் அதனால் நடக்க முடிந்தது. கோயிலருகே, அதுவும் கோயில் வாசற்படியருகே வந்துவிட்ட அந்தக் குதிரையை அருக்காணியுடன் அம்மன் கோயில் தொண்டு செய்யும் அவளது தோழிகள் சிலர் பார்த்து விட்டனர். திடுக்கிட்டுப் போய்க் குதிரையிடம் ஓடி வந்தனர். குதிரை அவர்களை நோக்கித் தலையைக் குலுக்கிற்று! கால் களைப் பூமியில் ஓங்கி ஓங்கி உதைத்தது! தோழிகளில் ஒருத்தி கோயிலுக்குள் ஓடினாள். அடுத்துச் சில நொடிகளில் அருக் காணித் தங்கம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந் தாள். அதற்குள் குதிரை கீழே விழுந்துவிட்டது! "அண்ணா!" P 461