உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை த குப்பியது- ஆனால்...? 53 வேடன் வடிவில் செம்பகுலன் பாராங்கல்லைப் பொன்னர் தலையில் போடப் போவதை ஏரியின் எதிர்க்கரையில் நின்று பார்த்த சின்னமலைக் கொழுந்துக் கவுண்டரும் படைவீரரும் மற்றவர்களும் தங்களையறியாமல் "அய்யோ" எனக் கூச்ச லிட்டு விட்டனர். தனது தலை நோக்கி வந்துவிட்ட பாராங்கல் லைக் கண்டுவிட்ட பொன்னர், தலையைச் சற்று வளைத்து சாய்த்துக் கொள்வதற்குள் அவனது வலதுகரமானது ஒரு அனிச்சச் செயல் போல இயங்கி வாளை ஓங்கி அந்தக் கல் லைத் தடுத்து வெட்டிய வேசுத்தில் அந்தக்கல், துண்டு துண்டா கச் சிதறிக் கீழே விழுந்தது. கல்லில் மோதிய வேகத்தில் வாளும் வளைந்து போயிற்று. வளைந்த வாளைப் பொன்னர் தரையில் வீசியெறிந்துவிட்டு, "அடேய்! யார் நீ? உண்மையைச் சொல்!' என்று கத்திக்கொண்டே செம்பகுலனின் கையைப் பிடித்து முறுக்கினான். உடனே செம்பகுலன் 'அரசே! என்னை மன் னித்துவிடுங்கள்! நான் தங்களைக் கொல்வதற்காக ஏவி விடப் பட்டவன். மூச்சு விட்டுக்கொள்ள அவகாசம் கொடுங்கள். எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறேன்" என்று மன் றாடியவாறு மண்டியிட்டுப் பின்னர் காலிலேயே விழுந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 44 "என்ன உண்மைகளைச் சொல்லப் போகிறாய்? சொல்! என்று பொன்னர் அதட்டினாலுங்கூட இப்போது அமைதி யாகிவிட்டிருந்தான். எதிர்க்கரையிலிருந்த சின்னமலைக்கொழுந் தும் படை வீரர்களும் பொற்கொல்லர்களும் பொன்னர் இருந்த இடம் நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தனர். 34 . அரசே! நான் சொல்வதைத் தங்களால் நம்ப முடியாது! ஆனாலும் நடந்திருக்கிறது!" என்றான் செம்பகுலன். இன்னும் என்னை எப்படி ஏமாற்ற முனைகிறாய் என்று பார்க்கிறேன்! சீக்கிரம் சொல்! என்ன நடந்தது? யார் உன்னைத் தூண்டி விட்டு என்னைக் கொல்ல அனுப்பியது? 472