உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி "தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! ஆனால் ஆயி ரம் கணைகளானாலும் அவற்றைத் தன் கையில் உள்ள கேட யத்தால் தடுத்து நிறுத்தி-வான்மழை போலப் பொழிகின்ற கணைகளையும் வாள் வீசி முறித்தெறிகிற சக்தி படைத்தவன் சங்கர் எனக் கேள்விப்பட்டிருக்கிறோமே!" என்று எதிர்க் கேள்வி போட்டான் தலையூர் மன்னன்!

  1. 4

'மன்னா! அதையெல்லாம் நான் யோசிக்காமல் இல்லை! அதையும் யோசித்தபிறகு எனது மூளையில் உதித்த திட்டத் தைத்தான் இப்போது விளக்குகிறேன்!" விரைவாக விளக்குங்கள்!" - 'நாம் இப்போது வீரப்பூர் காட்டின் நடுப்பகுதிக்கு வந்து விட்டோம். இன்னும் சிறிது நேரத்தில் சங்கரின் படையும் இந்த இடத்துக்கு வந்துவிடும். அந்தப் படை வருவதற்கு முன்பு நாமும் நமது படையினரும் புதர்களோடு புதர்களாக - பாறை களோடு பாறைகளாக ஒளிந்து கொள்ள வேண்டும்! சிறு சந்தடியும் இல்லாமல் மிகத் தந்திரமாக இதைச் செய்ய வேண் டும். முன்னேற்பாடாக நமது குதிரைப் படைகளும் தேர்ப் படையும் வேறு வழியில் போக்குக் காட்டி தலையூர் நோக்கிச் செல்ல வேண்டும். தலையூர் படை வேறு வழியாகத் தலையூர் நோக்கிச் செல்கிறது என்ற செய்தி எப்படியும் சங்கருக்கு அவ னது ஒற்றர்கள் மூலம் கிடைக்கும். அதை நம்பி அவன் வீரப் பூர் காட்டில் நாம் வலைவிரிக்கப் போகும் பகுதிக்குப் படை களுடன் வந்து சிக்கிக் கொள்வான். நான்கு பக்கமிருந்தும் புதர்களிலே பதுங்கியுள்ள நமது வில் வீரர்கள் அம்புகளைப் பொழிந்தால் எதிரிகளின் கைகளில் எத்தனை கேடயங்கள் இருந்தாலும் என்ன செய்து விட முடியும்? குழிக்குள் விழுந்து விட்ட யானையைப் போல் சங்கரின் படை இந்த வீரப்பூர் காட்டுக்குள்ளே திக்குமுக்காடத்தான் போகிறது! குழிக்குள் கிடக்கும் யானையையாவது சிலநாள் பட்டினி போட்டு அடக் கிப் பிறகு வெளியே தூக்கிப் பழக்குவார்கள்! ஆனால் நாம் தூக்கப்போவது சங்கரின் பிணத்தை! வீரமலையின் பிணத்தை! வளநாட்டு வீரர்களின் உயிரற்ற சடலங்களை! செல்லாத்தாக் கவுண்டர் வெறிச் சிரிப்பு சிரித்துக்கொண்டே இப்படி விளக்கமாக ஒரு வியூகம் வகுத்துக் கொடுத்தார். தலையூர்க்காளிக்கு மீண்டும் குழப்பம் மறைந்திருந்து தாக்கி வளநாட்டுப் படையை விரட்டியடிக்கலாம் என்பது சரி 491