உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி கால் வரப்புகளைத் தாண்டிக்கொண்டும் ஒற்றையடிப் பாதை யில் ஓடி வருவதும் தடுமாறி வயல்களில் இறங்குவதுமாகக் குதிரையொன்றில் வளநாட்டு வீரன் ஒருவன், தன்னை வள நாட்டுக்காரன் என அடையாளம் காட்டிக்கொள்ளும் கொடி யொன்றைக் கையில் தூக்கிப் பிடித்து அசைத்தவாறு அங்கு வந்து சேர்ந்தான். 'ஒற்றனே! என்ன விசேஷம்?" என்று சங்கர் கேட்டான். படையொன்று முன்னேறும்போது எதிரே என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை அறிந்து வர வழக்கமாக அனுப்பப்படுபவர்களில் ஒருவனே அந்த ஒற்றன். ஒற்றர்களும் மனிதர்கள்தான். அந்த வேலையின் நிமித்தம் அதற்குரிய பயிற்சி களைப் பெறுகிறார்கள். சில நேரங்களில் அவர்களும் தப்புக் கணக்கு போட்டு விடுவது உண்டு! அதற்கு உதாரணம்தான் இந்த ஒற்றன்! செல்லாத்தாக் கவுண்டரின் யோசனையின்படி தலையூருக்கு வேறு வழியாகப் போக்குக் காட்டி அனுப்பப் பட்ட படைகளைப் பார்த்துவிட்டு ஏமாந்துபோன அவன், சங்கரை நோக்கி, 'அரசே! தலையூர்ப் படைகள் அனைத்தும் வீரப்பூர் காட்டுப் பாதையில் வராமல் மயிலம்பட்டியைச் சுற் றிக் கொண்டு தலையூருக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர் என்றான். " அதற்குள் வீரமலை அவனைப் பார்த்து, 'ஏன்? எதற்காக? சுருக்கமான வீரப்பூர் பாதையை விட்டுவிட்டு சுற்று வழியில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான். .. .. எதிரே வரும் நமது படையை எதிர்ப்பதற்கு பயந்துகொண்டு தலையூர் மன்னன் அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். என்று அந்த ஒற்றன், தனது யூகத்தை வெளியிட்டான். சங்கர் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல். "இருக் காது! இதில் ஏதோ சதி இருக்கிறது! மயிலம்பட்டி வழியாக ஒரு பகுதி படையும் மாயனூர் வழியாக மற்றொரு பகுதிப் படையும் போவது போல நமக்குப் போக்குக் காட்டிவிட்டு, திடீரென இருபுறமிருந்தும் வந்து நம்மீது இடுக்கித் தாக்குதல் நடத்துவார்கள்!" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான். . - அந்த ஒற்றனை விடச் சங்கர் பரவாயில்லை என்றாலும் தலையூர்ச் சதியைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசவில்லை என்பதே உண்மை! "சங்கர் சொல்வது போலவும் நடக்கலாம்! எதிரிகளின் இடுக்கித் தாக்குதலைச் சமாளிப்பதுபோல நமது 493