உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகளம் தொடக்கம்.!-- 56 இதுதான் சங்கரின் படையைத் தாக்கிச் சாய்த்திடச் சரியான நேரம் என்று கருதிய செல்லாத்தாக் கவுண்டர் ஆகாயத்தை நோக்கித் தனது வில்லை வளைத்து அதில் நாணேற்றிச் செலுத்த ஒரு அம்பையும் கையில் எடுத்து விட்டார். அந்த அம்பு ஆகா யத்தில் கிளம்புவதை அடையாளமாகக் கொண்டு உடனே தலையூர்ப்படை, தனது தாக்குதலைத் தொடங்கவேண்டுமென் பது முன்னரே வகுக்கப்பட்ட ஏற்பாடல்லவா- அந்த ஆணை பிறப்பிக்க செல்லாத்தாக் கவுண்டர் தயாராகிவிட்டது கண்ட தலையூர்க்காளி மன்னன், அவரை நோக்கிக் கையமர்த்தி சற் றுப் பொறுமையாக இருக்குமாறு பணித்துவிட்டான். எரிந்து கொண்டிருக்கும் ஒரு காட்டுக்குள் மரக்கிளையில் அமர்ந்து ஒரு குயில் எந்தச் சஞ்சலமுமின்றி பாடிக்கொண்டிருப்பது போல விரோத நெருப்பு மூண்டெழுந்து பற்றி எரிந்து கொண்டிருந்த அவனது நெஞ்சத்தில் மாயவரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் அந்தக் குயிலின் பாட்டாக இசைத்துக் கொண்டிருந்தன. மாய வருக்காக ஒரு சமாதி தயாரிக்கிறார்கள் வளநாட்டு வீரர்கள். அந்தப் பெருங்குழியில் அவரது உடலைக் கிடத்தி அடக்கம் செய்து முடிப்பதற்குள்ளாக சங்கரின் மீது தாக்குதலைத் தொடர்ந்து விட்டால் இரு படைகளின் மோதுதலுக்கிடையே மாயவரின் உடல் அனாதைப் பிணமாக அலைக்கழிய நேரிடும். என்னதான் எதிர்முகாமுக்கென மாயவர் வாதாடிக் கொண்டிருந்தாலும் அந்த நாட்டுக்காரராகவே ஆகிவிட்டாலும் -அவரால் தலையூர் அரசு பெற்றிருந்த நன்மைகளை மறந்துவிட இயலவில்லை காளி மன்னனால்! அவர்பால் அவன் கொண்டிருந்த ஆழ மான நட்பு, இடையில் இருந்து கலகம் விளைத்தவர்களால் முழுமையாக அழிந்து போய்விடவில்லை! என்ன இருந்தாலும் தலையூருக்கு எதிராக அவர், பொன்னர் சங்கர் பக்கம் போயி ருக்கக்கூடாது என்ற கருத்து, காளி 'மன்னனிடம் சிலரால் நயமாக உரைக்கப்பட்டபோதும் - நச்சு எண்ணத்துடன் உரைக் கப்பட்டபோதும் மாயவர் மீது அவனுக்குக் கோபம் ஏற் பட்டது உண்மையெனினும் அவரை இழந்துவிட்டோமே என்ற 496 - -