உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி என்று கலிங்கத்துப் பரணி கூறும் போரின் சிறப்பை ஒத்ததாக அமைந்தது வீரப்பூர் காட்டினிடையே நடந்த போர்! தளபதி வீரமலையை ஒரு பகுதியிலும் வையம்பெருமானை மற்றொரு பகுதியிலும் வளைத்துக் கொண்டு. சங்கருக்குப் பக்கபலமாக அவர்களிருவரும் இல்லாத அளவுக்குப் பிரித்து விட்டால் சங்கரைத் தலையூர்க்காளி எளிதில் வீழ்த்திவிட முடி யும் எனக் கருதிய செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் தமது படைவீரருடன் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு தாக்கினர். செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சிக்கு ஏற்ப தலை யூர்க் காளியும் சங்கரும் வேறொரு முனையில் கடும் போர் புரிந்தனர். சங்கர் சுழற்றும் வாளின் வேகத்தில் தலையூரா விடுத்திட்ட சுடு ஈரங்கள் அனைத்தும் பொடிபட்டுப் புழுதித் துகள்களாக அந்தக் களத்தில் விழுந்து சிதறிக்கொண்டே யிருந்தன. ன் வீரமலையையும் வையம்பெருமானையும் மிகச் சுலபமாகத் தோற்கடித்துவிடலாமென வியூகம் வகுத்த வகுத்த செல்லாத்தாக் கவுண்டர் திணறிப் போனார். அந்த இருவரின் மின்னல் வேகத் தாக்குதல் கண்டு மாந்தியப்பன் திகைத்தான். தன் தந்தையை நோக்கி அப்பா! ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் போலிருக்கிறதே!' என வாய்விட்டு அலறிவிட்டான். வீர மலை, வையம்பெருமான் இருவரையும் வெகுவேகமாக எதிர்த்து வளநாட்டு வீரர்கள் பலரைக் கொன்று குவித்து, அதற்கு ஈடாகத் தன் பக்கமும் பல வீரர்களைப் பலி கொடுத்துவிட்ட செல்லாத்தாக் கவுண்டர் ஒரு கட்டத்தில் வீரமலையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் அவனோடு மோதாமல் தனது குதிரையில் அப்படியே அசைவற்று அமர்ந்து, தன் கையிலிருந்த வாளைத் தாழ இறக்கிக் காட்டினார். செல் லாத்தாக் கவுண்டர் சமரசத்துக்கு வருகிறார் அதனால்தான் வாளைத் தாழ இறக்கிக்காட்டுகிறார் எனக் கருதிய வீரமலை, உடனே போரை நிறுத்தி விட்டு 'என்ன?' என்று அவரைப் பார்த்துக் கேட்டான். செல்லாத்தாக் கவுண்டரையொட்டியே வந்த மாந்தியப்பனும் அங்கு வந்துவிட்டான் உடலில் பல காயங்களுடன்! - 'சரணாகதிப் படலமா?" என்று வையம்பெருமான், அவர் களிருவரையும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டே கேட்டான். 41 'இல்லை! நமக்குள்ளே ஒரு சமாதானம்!" என்று பல்லை இளித்தார் செல்லாத்தாக் கவுண்டர். அதற்குப் பொருள் புரி யாமல் வீரமலையும் வையம்பெருமானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 501