உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் படுத்த வேண்டும் - இந்தத் திட்டத்துடன் காளி மன்னன் காற்றி னும் கடிய வேகத்துடன் தலையூர்ப் பாதையில் போய்க்கொண் டிருந்தான். சங்கர் காயமுற்றானே தவிர, கொல்லப்படவில்லை பொன்னரும் இன்னும் போர்க்களத்துக்கு வந்து சேரவில்லை! எனவே அவர்களை எதிர்த்து வீழ்த்திட தலையூர்க் கோட்டைக் குச் செல்வதே சரியென்று காளி மன்னன் கருதினான். அவன் கருத்தறிந்தது போல குதிரையும் நாணில் அழுந்திக் கிளம் பும் அம்பு போல வேகங்காட்டிச் சென்றது! - சங்கரை மெய் சேர அணைத்தபடி வீரமலை, தரையில் சாய்ந்தான். கண் கட்டி விளையாடும் சூதாட்டப் பலகையில் வீசப்பட்ட கூரிய முட்களைப்போல, காளி மன்னன் விடுத்த அம்புகள், சூதறியாத சூரன் வீரமலையின் உடல் முழுதும் குத்தித் தொத்திக்கொண்டிருந்தன. நெற்றியில் தைத்த அம்பின் வழியாக ரத்தம் குபுகுபுவெனப் பெருகிக் கொண்டிருந்த நிலையிலும் சங்கர், வீரமலையின் உயிர் அமைதியாகவும் அஞ்சாத் தன்மையுடனும் பிரிந்திடும் காட்சி கண்டு பதறிப் போனான். பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் ஒன்றிக் கலந்து வாழ்வின் உயர்வு தாழ்வுகளில் சமபங்கு ஏற்று உண்மையாகப் பழகிய சோழன் தோட்டி குடும்பத்தின் வழித் தோன்றலாம் வீரமலை, தனது மடியில் சவமாகப் படுத்திருக் கிற காட்சியை சங்கரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொன்னர் சங்கர் என இரண்டு இரண்டு சகோதரர்களில்லை, வீர மலையையும் சேர்த்து மூன்று சகோதரர்கள் என எண்ணிப் பெருமைப்பட்டவர்கள் அல்லவா? அந்த மூவருக்கும் தங்கை யாகத்தானே அருக்காணி விளங்கினாள் - அவர்களில் ஒரு சகோதரன் இதோ சவமாக! போர்க்களத்தில் உயிர் துறந்து புகழின் உச்சியில் ஏறிவிட்ட புலிப் போத்தாக! 4. வளநாட்டுத் தளபதியே! எங்கள் வாழ்வில் இணைபிரி யாத உடன் பிறப்பே! என்னைக் காத்திட உன்னைத் தந்துவிட் டாயா? களத்தில் காயம்பட்டுவிட்ட நான் எதற்காக உயிர் வாழவேண்டுமென நீ நினைத்தாய்? போரில் புண் பெற்ற பின் னர் வாழ்வது வீரர்களுக்கு அழகோ? முதுகில் காயம்பட்டால் தானே மானப்பிரச்சினை நெற்றியில்தானே காயம் என்று என்னால் மனநிறைவு கொள்ள முடியவில்லையே! எனக்கு உயிருக்கு உயிராய் எங்கள் குடும்பத்துக்கு, அரணாய் பாதுகாப்பதில் பத்து மாதம் சுமந்த தாயாகவும் பண்பு போதிப்பதில் பற்றுக் குறையாத் தந்தையாகவும் பயிற்சி 506 - -