உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் கலைஞர் மு.கருணாநிதி என்பதினால்தான் சொல்லத் தயங்கினேன். இப்போது அதை சொல்லிவிடுகிறேன். நமக்குள்ளே ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டு என்னடா பெரிய வெற்றியென்று விரக்தியடைந்த நான் களத்தை விட்டு வெளியேறிவிட்டாலுங் கூட ஓரிடத்தில் நின்று நடப்பதைக் கவனித்தேன். வையம் பெருமான் வெட்டுண்டு பிணமாக வீழ்ந்ததைக் கண்டேன். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வீரமலையின் பிணம் விழுந் தது. இறுதி வெற்றி உன் அண்ணன் சங்கருக்குத்தான் என்றா லும் களத்தில் தோற்றோடிய தலையூர்க்காளி மன்னன், சங்கரின் நெற்றியை அம்பால் துளைத்துவிட்டான். அதனால் சங்கரும் உயிரோடு இருப்பது சந்தேகமே! இந்தப் போரில் என் தந்தை செல்லாத்தாக் கவுண்டரையும் இழந்துவிட்டேன். இத்தனை கொடூர விளைவுகளைக் கண்டபிறகு இந்தக் குலப் - வருகிற என்னை வரவேற்பதற்குப் பதிலாக வசைபாடுவது நியாயமா?" என்னதான் மாந்தியப்பன் பாராங்கல்லொன்று பசுவெண் ணெய் போல உருகுவதாகப் பேசினாலும் அவனையும் அவன் பேச்சையும் அருக்காணி நம்புவதற்குத் தயாராக இல்லை. படுகளம் நோக்கிப் போகின்ற இந்தப் பாவையிடம் உன் பசப்பு மொழிகள் எவையும் எடுபடமாட்டா என்பதை அறிந்து கொள்! எனக்குற்றார் உறவினர், அருமை அண்ணன் சங்கர். அஞ்சாநெஞ்சத் தளபதி வீரமலை அனைவரும் காலமாகினர் அல்லது நாயமுற்றனர் என்பதை நான் நம்ப வேண்டுமென்ப தற்காக உன் தந்தையும் மாண்டுவிட்டதாகக் கதை கட்டுகிறாய்! களம் சென்றார் வீழ்ந்தார் எனும் சோகச் செய்தி கேட்டுச் சோர்ந்து விடுபவள் அல்ல தமிழச்சி என்பதறிந்தும் -எஞ்சி யுள்ளோரையும் ஏன், இளம் மழலையையுங்கூட போருக்கு அனுப்பிவைக்கும் புலிக்குணம் கொண்டவள் என்றறிந்தும் எதற்காக இங்கு நடித்துக்கொண்டிருக்கிறாய்? நடுங்குகிறது உனது தேகம்! ஒடுங்கப் போகிறது உனது உயிர்! காட்டிக் கொடுக்கும் கயவர்கள் வாழ்ந்ததுமில்லை, அவர்களை நாங்கள் வாழ்விடப்போவதுமில்லை!' அருக்காணி போர்வாளை உயர்த்திக்கொண்டு மாந்தியப் பனை நோக்கிப் பாய்ந்தாள். ஆனால் அவன் தனது குதிரை யைத் தட்டிவிடவே, அது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன் உயிரைப் பாதுகாத்துக் கொடுத்தது. தன் வாள்முனையிலிருந்து அவன் தப்பிவிட்டதைக் கண்ட அருக்காணி, தனது தோழி களுக்கு உடனடியாக ஆணை பிறப்பித்தாள் அவனை வளைத்து வீழ்த்துமாறு! 517