உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அழிக்கப் போர் வெறி கொண்டு கிளம்பினார்களே தவிர தலை குனிந்து தமது தவறுணர்ந்து அடங்கிப் போக விரும்ப வில்லை! ஆனால் அவர்களுக்கு முன்னால் அதிவிரைவாகக் குதிரையி லமர்ந்தவாறு வந்து நின்றான் தலையூர்க் காளி மன்னன்! பதினெட்டு நாட்டுத் தலைவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்! பொன்னர் சொன்னது அனைத்தும் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! எதையும் மறுத்திடும் துணிவு எனக் கில்லை என் மனச்சாட்சியை நான் மதிக்கிறேன்! வேட்டுவரும். வேளாளரும் அடியோடு அழியக் காரணமாக இந்த யுத்தம் அமைந்திட வேண்டாம்! சிறு பகையுண்டு இரு பிரிவார்க்கு மிடையே! அதனைப் பெரும் பகையாக வளர்த்த பெருமை யாருக்கு உண்டு என்பதைப் பொன்னர் சொல்ல எல்லோரும் கேட்டீர்கள்! எனவே, பதினெட்டு நாட்டுத் தலைவர்களும் படை வீரர்களும் படைக் கலன்களைக் கீழே போடுங்கள்! ஒன்று மட்டும் உறுதி! நான் ஏதோ பொன்னரிடம் உயிர்ப் பிச்சை கேட்டு மண்டியிடப் போவதாக மட்டும் நினைத்து விடாதீர்கள்! பொன்னரின் சக்திக்கும் ஆற்றலுக்கும் நானொன் றும் சளைத்தவனல்ல! ஆனால் இந்த யுத்தம் நானும் பொன் னரும் மட்டும் தனித்து மோதி அத்துடன் முடிய வேண்டும்! இருவர் கட்டுமே போரிடுகிறோம்' இந்தப் போரில் நான் வீழ்ந்தால் தலையூரில் வளநாட்டுக் கொடி பறக்கட்டும்! பொன்னர் வீழ்ந்தால் வளநாட்டில் தலையூர்க் கொடி பறக்கட்டும்! எப்படி யிருந்தாலும் எங்கள் யுத்தம் தவிர்க்க முடியாதது! இந்தக் கீட்டத்தில் சமாதானம் என்பது என் மானத்திற்கு விடப்படும் அறைகூவலாகி விடும்! பொன்னரும் தனது சபதத்தை நிறை வேற்ற என்னை எதிர்ப்பது என்பது கட்டாயமாகிவிட்ட ஒன்று! எனவே இருவரும் எங்கள் முடிவை இங்கே நிர்ணயித் துக் கொள்கிறோம்! இருதரப்பிலும் உள்ள மற்றவர்கள் ஒதுங் கிக்கொள்ளுங்கள்! எங்கள் கைகளில் உள்ள படைக்கலன் களுக்கு மட்டுமே இனி வேலை!' - . F - . இப்படி உரக்கக் கூறிக் கொண்டு, தனது குதிரையைப் பொன்னர் மீது தட்டிவிட்டான் காளி மன்னன்! இரு வீரர் களும் புரவிகளில் இருந்தவாறே வாட்போர் புரிந்தனர்! பின் னர் அவற்றிலிருந்து இறங்கி - கோட்டை முகப்புக் கொத்தளத் தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்திப் போரிட்டனர்! பின்னர் ஆயுதங்களின்றி ஒருவரைத் தூக்கியொருவர் பந்தாடிப் போரிட் பொன்னரின் குரல்வளையைப் பிடித்து நெறித்துக் டனர்! 527