உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வீரமலைக்குச் சற்று அருகாமையில் பீடம் போன்ற ஒரு பாறைச் சரிவில் நெஞ்சில் பாய்ந்த வாளுடன் சிரித்த முகத் துடன் சாவை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான் சங்கர்! 64 'சின்ன அண்ணா! என்று கதறினாள் அருக்காணி - அவளு டன் வந்த தோழிகளும் கதறியழுதுவிட்டனர்! அந்த ஒலி வீரப் பூர் படுகளம் முழுவதும் எதிரொலித்தது! சங்கரின் உடல் மீது விழுந்து புலம்பினாள். அந்தப் புலம்பல் இன்னமும் வீரமலைப் பகுதியில் - வீரப்பூர் படுகளப் பகுதி ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. யில் - ஆனை போல் நீ இருந்து அண்ணா அரசாளும் அரண்மனையில் பூனை போல் நானிருந்து புலம்புகிறேன் பாரண்ணா! தென்னை நிறைந்திருக்கும் அண்ணா தெரு வீதி பூத்திருக்கும்! தென்னை தலை சாய்த்தே என் பிறவி சோர்ந்து விழப் போனீரே! பூத்திருக்கும் மஞ்சள் வளர்ந்திருக்கும் சின்னண்ணா மருதாணி வயல் எல்லாம் நெல் வளரும் சின்னண்ணா வாடுகிறேன் நான் தனியாய்! இஞ்சி வளர்ந்திருக்கும் சின்னண்ணா எலுமிச்சைக் குலுங்கி நிற்கும் இளங்கொடியாள் நான் தனியே இங்கிருந்து புலம்புகிறேன்! ஊரெங்கும் பட்டாளம் சின்னண்ணா ஓடி வந்த வேடுதளம் ஓடி வந்த வேடுதளம் அண்ணா நீ ஒரு நொடியில் நாடெல்லாம் பட்டாளம் சின்னண்ணா. நடுங்கி வந்த வேடுதளம்! சாய்த்தாயே ! நடுங்க வந்த பகைவரையே அண்ணா, நலிவடையச் செய்தாயே! குப்பாயி சிறை பிடித்துக் கொள்ளையிட்ட கொடியவரை தப்பாமல் சங்கரித்து சின்னண்ணா தவிடு பொடி செய்தாயே! 530 பச்சனா முதலி மகள் சின்னண்ணா, பருவமுள்ள குப்பாயி பக்கம் அழுத குரல் உன்னைப் பதைபதைக்க வைத்ததுவே! ஒக்கப் பிறக்கணுமா? சின்னண்ணா, ஒருதாய் முலைப் பால் பருகணுமா? பக்கம் ஒரு பெண்ணழுதால் உன் பட்டாளம் சீறுமண்ணா!