உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பொன்னர், தன் அன்புத் தங்கையை ஆரத் தழுவி மெல்லத தூக்கித் தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டு படுகளத்தை அங்கிருந்தவாறே பார்த்தான். சங்கர், வீரமலை, வையம்பெரு மான், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மடிந்து கிடக்கும் அந்தக் கொடுமையான காட்சியைக்கண்டு அவன் கண்ணீர் வடிக்கவில்லை. தனது துக்கத்தை வெளிப்படுத்தினால் தனது எனவே அவ தங்கை அருக்காணியின் நெஞ்சம் வெடிக்கும் ளையும் இழந்துவிட அவன் தயாராக இல்லை! அருக்காணி யின் உச்சந்தலையில் தனது முகத்தைப் பதிய வைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல்மொழி கூறினான். - அருக்காணீ! அரச பரம்பரைகள் என்றால் போர் செய்து தான் தீரவேண்டுமென்று கட்டாயமில்லை! அந்தத் தேவையில் லாமலே அரசுகள் நடக்கலாம்! ஆனால், தேவையில்லாதது என்று நாம் எண்ணுகிற யுத்தம், சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுமேயானால் வீரர்கள் அதனைப் புறக்கணித்து ஒதுங்கிவிட முடியாது! வீரர்கள் என்பவர்கள் ஏதோ படைப் பிரிவுகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அல்ல! மான உணர்வுக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பவர் கள்! அப்படிப்பட்டவர்கள் வலியவரும் யுத்தத்தைக் கண்டு மிரளமாட்டார்கள்! மிரளக் கூடாது! அத்தகைய யுத்தங்களில் வெற்றி தோல்வியென்பதுகூட முக்கியமில்லை! களத்தில் காட்டப்பட்ட மான உணர்வுமிக்க வீரம்தான் முக்கியம்! அப் படியொரு வீரமரணத்தைத் தலையூர்க்காளி தழுவிக் கொண்டு விட்டான்! நான் நடத்திய சமருக்கு வெற்றி! செய்த சபதத் திற்கு வெற்றி! இருந்தபோதிலும் தோற்றுப்போய்க் களத்தில் வீழ்ந்துவிட்ட தலையூர்க் காளியின் வீரத்தை மதிக்காமல் போற்றாமல் இருக்க முடியாது! ஒரு போரின் வெற்றிக்கோ தோல்விக்கோ - பல உயிர்களை விலையாகக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது! இதோ வீழ்ந்து கிடக்கிற இருதரப்பு வீரர் களையும் பார்க்கும்பொழுது - அவர்களில் ஒருவனாகத்தான் தம்பி சங்கரை நான் கருதவேண்டும்! வீரமலையை - வையம் பெருமானை நான் அப்படித்தான் கருத வேண்டும்! நமது வளநாட்டுக்காக உயிர் கொடுத்த வீரர்களின் பெயர்கள் ஆம். பலரது பெயர்கள் பிரபலமானவைகளாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் சொந்த மண்ணின் மானங்காக்க உயிர் கொடுத்த எல்லா வீரர்களையும் நான் என் தம்பி சங்க ராகத்தான் கருதுகிறேன்! அருக்காணி! நீயும் என்னைப்போலத் தான் கருத வேண்டும் - இந்தப் படுகளத்தில் உயிரற்றுக் கிடக் கும் எண்ணிறந்த உடல்களில் சங்கரின் உடலுக்கு மட்டும் தனித்தன்மை காட்டி அழுது புலம்புவது சரியல்ல! இப்படி - 533