உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 பழைய கதையும் புதிய வரலாறும்/ அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு! வணக்கம். கூட்டம் - 44 ஓராண்டு காலத்திற்கு மேலாக 'குங்குமம்" இதழில் நான் எழுதி வந்த "பொன்னர் சங்கர்" (அண்ணன்மார் வர லாறு) தொடர்கதை கடந்த வாரத்துடன் முற்றுப்பெற்றுள்ளது. கவிஞர் சக்திக்கனல் அவர்கள் தொகுத்து வெளியிட்டதும், புலவர் பிச்சை அவர்கள் எழுதியதுமான அண்ணன்மார் சுவாமி கதை என்ற நூலிலும் வேட்டாம்பாடி திரு.அ. பழனிசாமி அவர்கள் எழுதிய "வரகுண்ணாப் பெருங்குடிக் பொன்னர் சங்கர் வரலாறு" என்ற நூலிலும் உள்ள கதைக் குறிப்புக்களை இப்போது உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இந்தத் தொடர்கதையின் தொடக்கத்தில் நுழை வாயில் என்ற தலைப்பில் இந்த வரலாற்றுக்கான பின்னணி குறிப்புகளையும் கருத்துக்களையும் விளக்கமாக வழங்கியிருக் கிறேன். அறுபது வாரங்களுக்கு மேலாக ஒரு வரலாற்றுப் புதினமாக நான் எழுதியுள்ள இந்தத் தொடர்கதைக்கு முன்ன தாக தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துவரும் பழைய கதையின் சுருக்கம் என்ன என்பதை உங்கள் முன்வைக்கிறேன். வேட் டாம்பாடி பழனிசாமி அவர்களும், புலவர் பிச்சை அவர் களின் அண்ணன்மார் சுவாமி பாடல்களைத் தொகுத்து வெளி யிட்ட கவிஞர் சக்திக்கனல் அவர்களும் தந்துள்ள இணைந்த கதை அம்சம் பின்வருமாறு வாங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் கோளாத்தாக் கவுண்டர். இவர் ஒரு சிற்றரசனைப் போல வாழ்ந்தவர். இவரது மனைவி பெயர் பவளாத்தா. மதுக்கரை 536