உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வேளாளகுலம் என்றும் சொல்லி அடையாளம் காட்ட வேண் டியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எல்லோரும் ஓர் குலம் தான்! வருகிறேனம்மா!" மாயவர், குதிரையைத் தட்டி விட, அது மாரிக்கவுண்டன் பாளையத்தை நோக்கி விரைந்தோட ஆரம்பித்தது. ஒத்தமாந் துறை விட்டு, இடைக்காடு போன்ற பகுதிகளைக் கடந்து அம ராவதி ஆற்றங்கரையிலிருந்து ஏறத்தாழ ஏழெட்டு கல் தொலை விலிருக்கக் கூடிய மாரிக்கவுண்டன் பாளையத்து எல்லையை அடைந்திட மாயவருக்கு அதிக நேரம் பிடிக்க வில்லை. எல் லையில் குதிரையை நிறுத்தி விட்டு சுற்று முற்றும் பார்த்தார். திடீரென அவர் தன் கண்ணெதிரே கண்ட காட்சியை நம்ப முடியாமல் அப்படியே திகைத்துப் போய் விட்டார். இருபதுக்கு மேற்பட்ட முரட்டுப் பன்றிகளின் கூட்டம். அந் தக் கூட்டத்திற்கு மத்தியில் மூன்று எடுப்பான தோற்றமு டைய வாலிபர்கள். அவர்களுடைய கைகளில் கட்டாரிகள் மட் டுமே இருக்கின்றன. கச்சையை வரிந்து கட்டிய நிலையில் மூவரும் கட்டாரியை ஓங்கியபடி அந்தப் பன்றிகளின் தாக்கு தலைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாகத் தெருக்களில் அலையும் பன்றிகளைப் போல அல்லாமல் ஒவ் வொன்றும் காண்டா மிருகத்தைப் போன்ற உடலமைப்புடனும் அதே போன்ற வலிமையுடனும் மூர்க்கத்தனமாக அந்த மூன்று வாலிபர்களையும் சூழ்ந்து கொண்டு அவர்களை மோதி வீழ்த் தப் பாய்ந்தவாறு இருந்தன. வாலிபர்கள் மூவரும் சளைக்க வில்லை. அச்சம் என்பதே அவர்கள் முகத்தில் தென்படவும் இல்லை.மாயவர், குதிரையை அங்கிருந்து நகர்த்தவும் இல்லை. காட்டுப் பன்றிகளின் கோரமான தாக்குதலை மூன்றே வாலி பர்கள் எதிர்த்துப் போராடுகிற நிகழ்ச்சி அவரைப் புல்லரிக் கச் செய்தது. பன்றிதானே எனக் கேவலமாக எண்ணுவது எவ்வளவு தவறு என்பதை அந்தக் காட்டுப் பன்றிகளின் வெறிபிடித்த தாக்குதலைப் பார்த்த போது மாயவரால் நன்கு உணர முடிந் தது போலும்; அதனால் திறந்த விழிகள் மூடாமல் ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தார். கட்டாரிகளைக் காட்டிக் குத்திக் கொல்வது போல போக்கு காட்டியே அந்தப் பன்றி களைக் களைப்படைய வைத்திடும் முயற்சியில் அந்த வாலிபர் கள் ஈடுபட்டிருப்பதை மாயவர் புரிந்து கொண்டார். அவ் வளவு எளிதில் அந்தப் பன்றிகள் களைப்படைவதாகத் தெரிய வில்லை. அந்தப் பயங்கரப் போராட்டம் நீண்ட நேரத்திற்குப் 48