உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வனுமே தங்களுடைய பெயரை யார் கேட்டாலும் சொல்லக் கூடாது என்று இந்தப் பாசறையில் சில ஆண்டுகளாகப் புது விதி செய்யப்பட்டிருக்கிறது" என விளக்கமளித்து விட்டு, மாயவரைப் பார்த்து புதிய கேள்வியொன்றைத் தொடுத்தார். "ஆமாம்-சுமார் இருபது அல்லது இருபத்தைந்து வருஷத் துக்கு முன்பு தலையூர் அரண்மனையை விட்டு துறவியாகப் போவதாக அறிவித்து விட்டுச் சென்ற தாங்கள் இரண்டொரு வருஷங்களுக்கு முன்பு திரும்பவும் தலையூர் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஒருமுறை அமராவதிக் கரையில் குதிரை யில் தாங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்ததைக் கூட, ஆற்றில் நீச்சலடித்துக் கொண்டே பார்த்தேன். கூப்பிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் தாங்கள் சென்ற வேகத் தில் என் கூச்சல் காதில் விழாது என்பதால் பேசாதிருந்து விட்டேன். அனைத்தையும் துறந்து எங்கெல்லாமோ சென்று விட்டு; பிறகு துறவறத்தைத் துறந்து விட்டுத் திரும்பிய கார ணம் என்னவோ?" இந்தக் கேள்விக்கு மாயவர் சிரித்துக்கொண்டே விடையளித் தார். 44 "நான் துறவறம் பூண்டால் அல்லவா; அதைத் துறப்பதற்கு? தலையூர் ஆட்சியில் பெரிய காளி மன்னருக்குப் பிறகு இள வரசன் காளி: பதவிப் பொறுப்பேற்கும்போது, நானே தான் அமைச்சராக நியமிக்கப் பெற்று ஆட்சிக்குரிய அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தேன். என் அறிவுரையை மீறி எந்தக் காரியமும் தலையூரில் நடைபெற்றதில்லை. ஆனால் அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. என் வார்த்தைகள் தலையூர்க்காளியின் முன்னால் மதிப்பற்றுப் போகிற ஒரு சூழல் தோன்றுவதை உணர்ந்தேன். நடைபெறும் தவறுகளுக்கு நானும் பொறுப்பாக இருக்க வேண்டுமா? என்று என் மனச் சாட்சி குடைய ஆரம்பித்தது. அந்தச் சங்கடத்தில் பதவியில் நீடிக்க விருப்பமின்றி; காளியிடமே கூறிவிட்டு மனையை விட்டு வெளியேறினேன். சோழநாடு. சேரநாடு, பாண்டியநாடு என பல பகுதிகளில் பத்தாண்டு காலத்திற்கு மேலாகப் பயணம் செய்தேன். பின்னர் வடபுலத்தில் காசிமா நகர் வரையிலே சென்றேன். கங்கை, யமுனையெனும் நதிக் கரைகளில் உள்ள நகரங்கள், சிற்றூர்களில் எல்லாம் அலைந்து திரிந்தேன். புத்தவிகார்கள், சமணப்பள்ளிகள் அங்கெல்லாம் பல ஆண்டு காலம் தங்கிப் பெருநூல்கள் பலவற்றைக் கற் றேன். இப்படியே இருபது இருபத்தி ஐந்து வருஷங்கள் கழிந் 54 . அரண்