உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - டரும், மாந்தியப்பனும் நன்றாகவே நடித்தனர். தாமரை மாளி கையிலிருக்கட்டுமென்றும் நெல்லியங்கோடனை அழைத்துச் சென்று அவனுக்குத் தேவைப்படுகிற நிலப்பகுதியின் எல் லைக்கோட்டை நிர்ணயிப்பதென்றும் - ஏமாற்றி அவனை மட் டும் செல்லாத்தாக் கவுண்டர் சாரட்டு வண்டியில் ஏற்றிச் சென்றார்! பிறகு? பிறகு?" மாயவரின் நாவசைவை எதிர்பார்த்து ராக்கியண்ணன் துடித்தார். "பிறகென்ன? ஒரு வயலோரம் நெல்லியங்கோடனை இழுத் துச் சென்று ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு, கருவேல மிளார் கொண்டு அவன் உடலெல்லாம் ரணமாக அடித்து வதை செய்தனர். மாளிகையிலிருந்த தாம ரையிடமும் மாந்தியப்பன் குறும்புத்தனம் செய்யத் துணிந்திருக் கிறான். மாயவர் சொல்லி முடிக்கவில்லை; ராக்கியண்ணன்" யய்யோ!" என அலறிவிட்டார். .. அய் 'தாமரைநாச்சி கற்பரசி மட்டுமல்ல; கண்ணகி தேவி போலத் துணிச்சலும் உறுதியும் கொண்டவள்! மாந்தியப்பனைக் காலால் உதைத்துக் கீழே தள்ளியிருக்கிறாள்! மண்ணைக் கவ்விய மாந் தியப்பன்; கொடுஞ்சீற்றங் கொண்டு வாளையெடுத்து அவள் கூந்தலை அறுக்க முனைந்திருக்கிறான். 'என்ன? என்று கேட்ட ராக்கியண்ணனுக்கு மீசை துடித்தது! ஆனால் தாமரை; அவன் கையிலிருந்த வாளைப் பிடுங் கிக் கொண்டு கணவனைத் தேடி ஓடினாள். கருவேலமிளா ரினால் அவனை அடித்துக் கொண்டிருந்த கயவர்கள் மீது வாளை வீசினாள். அந்தப் பொல்லாதவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். தாம் ரையாளோ; வாளை ஓங்கிய கையுடன் மற்றொரு கையால்; புண்ணாகிப்போன கணவனின் பொன்மேனியைத் தழுவிய வாறு வளநாட்டைவிட்டுப் புறப்பட்டாள்! இந்தச் செய்தியை இரண்டு நாட்களுக்குப் பிறகு கேள்விப்பட்ட நான் உடனடியா கக் காளியைச் சந்தித்து இப்படியெல்லாம் செல்லாத்தாக் கவுண்டர் நடத்தும் அக்கிரமங்களுக்கு நீயும் துணையிருக்க லாமா? என்று வேதனையுடன் கேட்டேன். தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய காளி; அப்படியொரு நிகழ்ச்சி நடை 60