உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி வில்லை என்பது அவர்கள் அந்தக் கோயிலைப் பற்றிப் பேசிய திலிருந்தே நன்கு புரிந்தது. "ஏ. அப்பா - இந்தக் கோயிலில் உள்ள அம்மனை எத்தனை ஊர்க்காரர்கள் வழிபாடு செய்கிறார்கள் தெரியுமா? ஆற்றின் இக்கரையில் மட்டுமல்ல; அக்கரையிலும் கூட ; மருதம்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, வசந்தபுரம், பெரியபட்டி, வேட்டாம் பாடி. முத்துக்காப்பட்டி, சாளைப்பாளையம், பழயபாளையம், நெய்காரப்பட்டி, நல்லயக் கவுண்டன்புதூர், எருமப்பட்டி, மரூர்பட்டி முதலிய பல ஊர்களில் வாழும் பெருங்குடி மக்கள் வாங்கலம்மனுக்கு வழிபாடு நடத்தாமல் இருப்பதில்லை!' - என்று அந்தக் கோயிலுக்குரிய பெருமையை வீரமலைச் சாம்புவன் விரித்துரைத்தான். பொன்னர்-சங்கர் இருவரையும் விட ஏழெட்டு வயது மூத்தவன் என்ற முறையில் வீரமலைச் சாம்புவனுக்கு இந்த விவரமெல்லாம் தெரிந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் வடபுலத்து மன்னர்களான கனகனும் விசயனும் தமிழர் வீரம் குறித்து வாயடக்கமின்றிப் பேசிய தாகக் கேள்வியுற்று: அங்ஙனமாயின் அவர்கள் தலையிலேயே கண்ணகி சிலைக்கான கல்லை ஏற்றி வருவதாகச் சூளுரைத்து அப்படிக் கொண்டு வந்த கல்லில் சிலை வடித்து விழா எடுத் ததையொட்டித் தமிழகத்தில் பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும் - அவற்றில் ஒன்றுதான் வாங்கலில் உள்ள அம்மன் கோயிலென்று பெரியவர்கள் சொல்வதாகவும் ராக்கியண்ணன்; தனது பயிற்சிக் கூடத்தில் மாணவர்களிடம் உரைத்ததும் மூவருக்கும் ஞாபகத்திற்கு வரத் தவறவில்லை. 4+ அண்ணா! வாங்கலம்மன் கோயிலுக்கு வரலாற்று அடிப் படையில் இப்படியொரு சிறப்பு இருக்கிறது; இதே காவிரிக் கரையில் உள்ள மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலுக்கு புராண ரீதியான கதையொன்று இருக்கிறதாமே; அது தங் களுக்குத் தெரியுமா?" என்று பொன்னரைப் பார்த்து சங்கர்; மிகுந்த ஆவலுடன் கேட்டான். 'தம்பி! அப்படியொரு கதையிருந்தால் நமது ஆசான் நமக் குச் சொல்லியிருப்பாரே!' என்று பொன்னர் பதில் அளித் தான். 44 அப்போது ஒரு குரல்; 'அந்தக்கதை ஒரு பெரிய கதை! 65