உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் பிச்சா பொழுது விடிந்து விடும். சுருக்கமாக கரகம் விடுகிற விழாக் கதையைச் சொல்லு!" என்றான். .. அப்படியா? சரி சரி... சொல்லுகிறேன் கேளுங்கள், கைலா சத்திலே, நாகமலையென்று ஒரு மலை இருக்கிறது. அங்கே ஒரு நாகப்பாம்பு. தனக்குக் குழந்தையில்லாமல் பரமசிவனை நோக் கித் தவம் செய்தது. அந்த நாகப்பாம்புக்கு அஞ்சு தலை. அதன் தவத்தைக் கண்டு மனம் இளகிய பரமசிவன், பார்வதியை அழைத்து, "நீ போய் அந்தப் பாம்புக்குக் குழந்தையாகப் பிற!" என்று கட்டளையிட்டார். பார்வதியும் அப்படியே அந்த நாகப் பாம்புக்குப் பெண் குழந்தையாகப் பிறந்தாள். அந்தக் குழந்தைக்குப் பெரிய காண்டியென்று அந்த நாகப் பாம்பு பெயர் சூட்டி வளர்த்தது. எப்படி வளர்த்தது தெரியுமா?" என்று ஓடக்காரன் மீண்டும் பாட ஆரம்பித்தான்: ஐந்து படம் விரித்து நாகம் அரவக் குடை பிடிக்க நாகம் குடை பிடிக்க அம்பாளுக்கு நற்சங்கு தாலாட்ட நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் சங்குநாதம் தாலாட்ட தாயார் தானே வளருகிறாள்" அவனே பாட்டை நிறுத்திலிட்டுக் கதையைத் தொடர்ந்தான்: இப்படியாகத் தானே வளர்ந்த பெரிய காண்டியம்மன், கொல்லிமலை விட்டு வீரமலைக் காட்டுக்குச் செல்வதற்காக காடுமலை வனவனாந்திரமெல்லாம் தாண்டி, தொட்டியம் வழி யாக வந்து காவேரிக் கரையைக் கடக்கும்போது மண்ணுடைய யானிடம் தகராறு ஏற்பட்டுக் கடைசியாக அவன் பெரிய காண்டி அம்மனுக்கு மண் கரகம் செய்து கொடுத்து மன்னிப் புக் கேட்கிறான். மண் கரகத்தோடு வரும் பெரிய காண்டியை மதுக்கரை செல்லாண்டியம்மன் பார்த்து விடுகிறாள்.. பார்வதி தேவிதான் பாம்பு வயிற்றிலே பெண்ணாகப் பிறந்து பெரிய காண்டியாக மண் கரகம் எடுத்து வருகிறாள் என்று செல்லாண் டியம்மனுக்குத் தெரியாது. செல்லாண்டியம்மன் கரகம் பொன் கரகம். அதனாலே அந்த அம்மன் பெரியகாண்டியம்மனைப் பார்த்து; "பொன் கரகம் தலையில் வைத்து நான் பூமிபதி ஆண்டிருக்க; இவள் மண் கரகம் தலையில் வைத்து 68 வாரவள்தான் ஆருமினி? இவள் நம்மில் பெரியவளா?