உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் அதே கேள்வியை வீரமலைச் சாம்புவனும் ஓடக்காரனைப் பார்த்துக் கேட்டான். ஓடக்காரன் கொஞ்சம் யோசித்து; பிறகு திடீரென நினைவு வந்தவனாகப் பதில் சொன்னான். .. மணியங்குரிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டருடைய பேத்தி கள். அவர்தான் இப்போது உயிரோடு இல்லையே; இந்தப் பெண்கள் இருவரும் சின்னமலைக்கொழுந்தாக் கவுண்டரின் மகள்கள். .. ஓடக்காரன் இந்தப் பதிலை சொல்லி முடிப்பதற்குள் அந்தப் பகுதியிலுள்ள மரங்களையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு போவதற்காக ஆவேச தாண்டவமாடிக் கொண்டு வந்தது போல ஒரு சூறைக் காற்று வீசியது! திருவிழாக் கூட்டத்தில் குய்யோ முறையோ எனப் பேரிரைச் சல்! ஆற்றோரம் மிதந்து கொண்டிருந்த ஓடங்கள் பல கவிழ்ந்து அவற்றில் இருந்தோர் ஆற்றில் விழுந்து தவித்தனர்! பொன் னர் சங்கர் வந்த ஓடமும் பெருஞ்சுழலில் தத்தளித்தது. தத் தளித்த வேகத்தில் அதனைத் தடுத்துத் தூக்கிப் பிடிக்காவிட் டால் கவிழ்ந்து விடுமென்பதற்காக, சட்டென்று தண்ணீரில் குதித்து வீரமலைச் சாம்புவன் ஒடத்தை நிமிர்த்தி நிறுத்தினான். அந்தப் பரபரப்பில் ஓடக்காரன் ஆற்றுக்குள் விழுந்து, நீச் சலடித்துக் கொண்டிருந்தான். பொன்னர்-சங்கர் மட்டுமே ஓடத்தில் இருந்தனர். அவர்கள் கண்ணெதிரே ஒரு பயங்கரம்.பெரியகாண்டி அம்மனாகவும், செல்லாண்டி அம்மனாகவும் அமர்ந்திருந்த அந்தப் பெண்களின் ஓடங்கள் இரண்டும் காற்றடித்த வேகத்தில் நிலை தடுமாறி ஆற் றோடு போய்க் கொண்டிருந்தன. அந்த ஓடங்களை நோக்கிப் பொன்னர் - சங்கர் தங்கள் ஓடத்தை வேகமாகச் செலுத்தினர். 7 2