உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி பாற்றிய அந்தப் பிள்ளையாண்டான்கள் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் பெயரால் அம்பாளுக்கு அர்ச்சனை பண்ண வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.' தாயார்; மகனிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்தாயியின் கண்களும் பவளாயியின் கண்களும் சிறகு முளைத்த வண்டுகளாகி ஒன்றையொன்று தழுவி ரீங் காரமிட்டன. பெற்ற பாசத்தின் அன்புப் பிணைப்பு எப்படித் தனது செல்வங்களைப் பாதுகாக்கிறது பார்த்தாயா என்று அந்த விழிகள் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொண்டன. அந்த உணர்ச்சியில் அவர்களின் கன்னங்கள் மாங்கனிச் சிகப்பு வண்ணங்களாயின. பெருமூச்சாக வெளிப்பட்ட இன்ப மூச்சு இந்த இளஞ்சிலைகளின் மார்பகத்தை விம்மியெழச் செய்து காவிரிக்கரையிலோர் கவர்ச்சிப் போட்டியை நடத்தின. மறைந்து மறைந்து அவர்களறியா வண்ணம் அந்த உயி ரோவியங்களின் கொள்ளையழகைக் கண்டு போதையேறித் தடுமாறிக் கொண்டிருந்தான் மாந்தியப்பன். அந்த எழிலரசிகள் தங்களின் "இஷ்ட தெய்வங்கள்" ஏற்றுக் கொள்ள வேண்டுமே யென்ற கவலையுடன் தங்களையே "நைவேத்யம் எனப் படைக்கத் தயாராயிருக்கும்போது: கோயிலுக்காகப் பூத்த மலர் களைக் கோவேறு கழுதை, துவைத்துக் கசக்கி மென்று தின் னத் துடிப்பது போல அவன் துடித்து நெளிந்தான். "தம்பி; அந்தப் பிள்ளையாண்டான்கள் பெயர் உனக்குத் தெரியுமா?" "தெரியாதேயம்மா!" உன் தங்கைகளை அவர்கள் காப்பாற்றியபோது கரை யோரத்தில் யாரோ அவர்களைப் பெயர் கேட்டார்கள். அவர் கள் என்ன சொன்னார்கள் என்று நானும் கவனிக்கவில்லை. இவர்களும் கவனிக்கவில்லை. நீயும் கவனிக்கவில்லையா? "இல்லையம்மா!'" "பிறகு எப்படி அந்தப் பிள்ளையாண்டான்கள் பெயருக்கு அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது? "பிள்ளையாண்டான்கள் என்றே அர்ச்சனை செய்தால் போகிறது!" என்று சிரித்துக் கொண்டே வையம் பெருமான் சொன்னான். 85