உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் யார் . குன்றுடையாருக்குப் பக்கத்தில் இருக்கிற குலவிளக்குத் தான் உன் அத்தை தாமரைநாச்சியார். இதைக் கேட்டதும் வையம்பெருமான் மட்டுமின்றி முத்தாயி, பவளாயியும் கூட ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். நெருங்கிய சொந்தம் என்பார்களே; அதுபோல விலகிய சொந்தம் இப்போது நெருங்கிவிட்டது அம்மா!" என்று முகத் தில் மகிழ்ச்சி மலர தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். 'தம்பி! நீ போய் அவர்களிடம் வேண்டுமானால் அந்தப் பிள்ளையாண்டான்களின் பெயர்களை விசாரிப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு வா! தயவுசெய்து சொந்த பந்தம் பற்றி சொல்லி உன் தந்தையின் கோபத்துக்கு ஆளாகிவிடாதே! உன்னை மட்டுமல்ல; என்னையும் வெறுப்பார் உன் தந்தை! நம் குடும்பத்துக்கே பெரிய துன்பம் வந்து சேரும்! இவ்வாறு எச்சரித்தாள் சிலம்பாயி! சரியம்மா! என் அத்தை மாமா இருவரின் முகத்தை மட் டும் பார்க்கிற பாக்கியத்தைப் பெற்று வருகிறேன்! தங்கை களும் என்னுடன் வரட்டும் அம்மா! அவர்களும் அவர்களைப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று நினைக்கிறேன்!' என்ற வையம்பெருமான், முத்தாயி பவளாயி இருவரையும் நோக்கி னான். 'சரியம்மா! நீங்களும் அண்ணனுடன் போய்விட்டு உடனே திரும்புங்கள்' என்று விடை கொடுத்து அனுப்பினாள் சிலம் பாயி! கோயில் சன்னதியில் அமைக்கப்பட்டிருந்த விழாப் பந்தலில் தனது ஆளம்புகளுடன் குன்றுடையானும் தாமரைநாச்சியும் அம்மனுக்கு மாவிளக்கேற்றும் காரியத்தில் மனமொன்றி ஈடு பட்டிருந்தனர். சற்று முதிர்ந்த தோற்றம் குன்றுடையானுக்கென்றாலும் முகத் தில் இருந்த பொலிவு மாறவே இல்லை. கணவனுடன் இணைந்து விவசாயப் பணிகளில் ஓய்வின்றி ஈடுபட்டு உழைத்ததின் அடையாளமாக தாமரையின் மாநிற மேனி கருத்திருந்தது எனி னும் அந்தக் களைபொருந்திய முகம் அப்படியே இருந்தது. இருவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். அவர்களுக் கருகே பொன்சரடுகளைக் கழுத்திலும் கடகங்களைக் கை 88