உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் உணர்ச்சி வசப்படாதே தாமரை! உனக்கு ஏற்கெனவே நெஞ்சு வலி! இரண்டு நாளைக்கு முன்பு கூடக் கஷ்டப்பட் டாய்! அதை மறந்து விடாதே! எதையும் சாதாரணமாக எடுத் துக்கொள்! என்றான். தாமரை நாச்சியோ, தன்னை மறந்து முத்தாயி பவளாயியை யும் வையம்பெருமானையும் தழுவிக் கொண்டு உச்சிமோந்து முத்தமீந்தாள். அவள் கண்களில் பெருமழை கொட்டியது! அவ்வாறே அந் தப் பெண்களும், வையம்பெருமானும் இதயம் கனத்துப் போய்த் தள்ளாடினர். பாச உணர்ச்சியின் ஆனந்தக் கூத்தில் பல ஆண்டுக்கால வாழ்க்கை வரலாற்று ஏடு புரண்டு கொண் டிருந்தது. வாய் பேசாமலே நெஞ்சங்கள் ஒன்றையொன்று நலம் விசாரித்துக் கொண்டன. குன்றுடையான் வையம்பெரு மானைக் கட்டியணைத்துக் கொண்டு முத்தாயி, பவளாயி இரு வரின் உச்சந்தலையில் முத்தமீந்தான். பிறகு தன்னருகே அசை வற்று நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்த தனக்கோடி செட்டியாரைப் பார்த்து: "செட்டியார் அய்யா! இவர்கள் சின்னமலைக் கொழுந்தின் செல்வங்கள்! என் மருமகப்பெண்களும், மருமகப்பிள்ளையும்! என்றான். 4. 'ஓ! அப்படியா?... உங்கள் பிள்ளைகள் மட்டும் உயிரோடு இருந்தால் இந்தப் பெண்களுக்குத் தாலி கட்டி, தாமரைநாச்சி யம்மையின் சபதத்தை நிறைவேற்றியிருப்பார்கள்" என்று வேதனை கலந்த கேலியாகச் சொன்னார் தனக்கோடி செட்டி யார். அதையெல்லாம் இப்போது பேசாதீர்கள். எல்லாம் நாம் நினைத்தபடியா நடக்கிறது?" என்று அங்கலாய்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டான் குன்றுடையான். தாமரை நாச்சியார் மீண்டும் தனது கண்கள் அருவியாவதை யன்றவரை தடுத்துக் கொண்டு, வையம்பெருமானையும், முத்தாயி, பவளாயி இருவரையும் பார்த்து, "சரி நீங்கள் போய் வாருங்கள். உங்கள் தாய் - தந்தையர் பார்த்தால் வீண் வம்பு" என்றாள். "போகிறோம் அத்தை! உங்களிடம் ஒன்று தெரிந்து கொள்ள வந்தோம். உங்களுக்கோ, மாமாவுக்கோ, செட்டியாருக்கோ 90