பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்மணித் தியம் 1. பூப்போல ஒரு புன்னகை அந்தி மாலே அற்புதமாகவே மணக்கிறது !... குமாரி மஞ்சுளாவின் மனத்தில் அப்போது புதிய் அமைதி தலகாட்டத் தலைப்பட்டது. தேவி-பாரடைஸ் திரைப்பட் அரங்கை மீண்டும் ஒரு முறை நோக்கினுள் அவன். உண்மை யிலேயே தேவலோகத்தின் தலவாசலில் பாதம் பதித்திருப் பதாகவே அவள் உணர்ந்தாள். அவ்வுணர்வு அவளுக்கு இதமளித்திருக்க வேண்டும் ! காலேயில் வேலைக்குப் புறப்பட்ட வள் ; ஐந்து மணி வரையிலும் பணிகள் காத்திருந்தன. உழைப்பு இல்லையேல், பிழைப்பு நடக்க முடியுமா ? இனி அவளுக்கு ஓய்வு , ஆமாம், நாளேக்கால வரைக்கும்! அவள் தன்னுடைய நளினமான பூவிரல்களைச் சொடுக்கி விட்டுக் கொள்ளலானுள். ரெமிங்க்டனில் அவள் டைப் பண்ணின கடிதங்கள், ரசீதுகள், விலைப்பட்டியல்கள் கொஞ்சமா, நஞ்சமா? மஞ்சுளாவின் எழில் மண்டிய இளம் மார்பகத்தில் மொய்த் திருந்த வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்து கொன் டிருந்தன. அவளுடைய பெருமூச்சு அடங்கியதுதான் தாமதம் : அந்த வண்ணத்துப் பூச்சிகளும் கப்சிப் என்று