பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மீளுட்சிக்கு மேற் கொண்டு பேச்சைத் தொடர முடிய வில்லை; தொண்டை அடைபட்டது. - மஞ்சுளா திகைப்புற்ருள். அப்பாவின் பால் அம்மாவின் மனம் காலங்கடந்து திழிம்புவதற்காகத்தான் அம்மா தன்னைப் பாவி என்று குற்றம் சுமத்திக் கொண்டு வருந்துகிருள் என்றும் அந்த வருத்தத்தில் அப்பா-அம்மாவின் வாழ்வுக் கடலில் புதிய அலே உருக்காட்டப் போகிறதென்றும் மனக்கோட்டை கட்டி யிருந்தாள் மஞ்சுளா. ஆனல் அம்மா கடைசியில் தன்ன யல்லவா சுற்றிவந்து நிற்கின்ருள்!- அது ஒரு சாதாரண விஷயம் அம்மா. இதற்குப்போய் இவ்வளவு தூரம் நீ வருந்த வேனுமா என்ன? எனக்கு நானே துணையாக நிற்கமுடியும் என்கிற ஒரு நம்பிக்கை உனக்கும் அப்பாவுக்கு இருந்ததால் தானே நீங்கள் இரண்டுபேரும் அன்றைக்கு அப்படிவிட்டுட்டுப் .ோக நேரிட்டது?. சரீ, சரி. முதலிலே நீ உன் முகத்தைத் துடைச்சிக்க அம்மா. யாராவது புரொட் யூசர் அல்லது பத்தி ரிக்கை நிருபர் வந்தாலும் வரலாம் உன்னைப் பேட்டிக் காண. முதலிலே நீ சாப்பிடு அம்மா ? என்று கேட்டுக் கொண்டாள் மஞ்சுளா. மீளுட்சி ஆற்ருமையோடு சிரித்தாள். அச்சிரிப்பில் விரக்தி மேலோங்கி இருந்தது. முகத்திரையில் படர்ந்திருந்த கண்ணின் உவர்க்கோடுகளின் கரையைத் துடைத்துக் கொண்டாள். மஞ்சு, நீ சூட்சுமமான பெண். அதனுல்தான், நான் ஒரு சினிமா நடிகை என்பதை நீ எனக்கு ஞாபகப்படுத்துறே நான் நடிகை என்பது இரண்டாம் பட்சம்தான். ஆகையினலேதான் நான் சினிமாவிலே நடிக்க மனம் துணிஞச விஷயத்தைக்கூட உன்னிடம் நாகைத் நெரீவிக்க முன்வரலே! நான் ஒரு தாய்; உன்னைப் பத்து மாசம் சுமந்து பெற்றவள். உன்னைப் பொறுத்த அளவிலே எனக்கென்று ஆசாபாசங்கள், லட்சியக் கனவுகள் இருக்குமில்லையா? அவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கிடத் தான் நான் சினிமாவிலே நடிக்கத் தொடங்கினேன், மஞ்சு அப்புறம் சாயந்தரம் நாம் பேசலாம் ' என்ருள், சொற்கள் இப் போது அமைதியோடு வெளிப்பட்டன,