இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்போது கணக்கப்பிள்ளை என் எசமானரைப் பார்த்து, ‘ஐயா, அந்தப் போலீஸாரால் என்ன முடியும்? போனது வரப்போகின்றதோ!’ என்று வருத்தத்தோடு சொன்னார்.
அது கேட்டு என் எசமானர், 'போம்--ஐயா, போம்; உமக்கு என்ன தெரியும் ? இதோ நான போலீசில் தெரிவிக்கின்றேன்,' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்.
40