உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு அவர்களுக்கு என்ன ஐயா, குறை? கம்யூனல் ஜி.ஓ. இருக்கவே இருக்கிறது, கை தூக்கி விட" என்று பொறாமையுடன் பொச்சரிப்புடன் பேசிவந்தோருக்கு அகமும் முகமும் அன்றலர்ந்த செந்தாமரையாகி விட்டது, விழாநாள், வகுப்பு ஆதிக்கக்காரருக்கு வேதனை தரும் நாள், திராவிடப் பெருங்குடி மக்களுக்கு, “பையன், என்ன செய்கிறான்?"-நண்பர் கேட்கி றார்."B.A., வகுப்பில் சேர்ந்திருக்கிறான்" தகப்பனார் கூறு கிறார் பூரிப்புடன். அவருடைய குடும்பத்திலேயே முதல் B. A,அரும்புகிறது -- இது கம்யூனல் ஜீ.ஓ-வின்பலன். இனி, என்ன செய்கிறான்? என்ற கேள்விக்கு, டிராம் ஓட்டுகிறான், துறைமுகத்தில் மேஸ்திரியாக வேலை பார்க்கிறான், கல்லூரியில் சேரவில்லை - இவனைவிட அதிக மார்க்கு வாங்கிவிட்ட பிராமணப்பையன் சேர்ந்து விட்டான் - என்று தகப்பனார் கூறுவார். அடுத்த ஆண்டு பள்ளிகள் துவக்கத்தின்போது, திராவிடக் குடும்பங்களிலே, ஏற்பட இருக்கும். திகைப்பை முன் கூட்டி எண்ணினாலே, நெஞ்சு 'பகீர்' என்கிறது. வந்தது விபத்து! அழிந்தது சமூகநீதி! மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களைப் பற்றி வீணாகப் பிரமாதப்படுத்திப் பேசுகிறாயே, பேயனே! பித்தனே!- என்று நம்மைக் கேலி பேசி, 158-ம் செக்ஷன் கொண்டு தாக்கி, தேசபக்தர்', ' இந்தி

10:


10