உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு வலுத்தவன் இளைத்தவனை ஏவலனாக்கிக் கொள்ளக் கண்டு, அது அவனவன் திறமையைப் பொறுத்தது என்று அறிவும் அன்பும் ஒரு சேரப் பெற்ற எவரும் கூறார் -அங்ஙனம் கூறுவோ ஆட்சியாளர் ஆகிவிட்டால், நாடு, காடு ஆகும். நம் நாடு, சமூக ஏற்றத்தாழ்வு மிகுந்துள்ள இடம் என்பது, வாதத்துக்குரிய விஷயமல்ல - உலகறிந்த உண்மை. ஏற்றத்தாழ்வு,ஏன் ஏற்பட்டது, யார் ஏற்படுத் தீனார்கள் என்பதும், இனி நான் கூறி மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல- நாடு அறிந்த இரக சியம் - நானிலம் கைகொட்டிச் சிரிக்கும் கேவலத்தன்மை வாய்ந்த விஷயம் - அவனி அறியும். இந்த ஏற்றத்தாழ்வின் பலனாக, சமுதாயத்திலே. வேதனையும் வெறுப்பும், மாச்சரியமும் மனத்தாங்கலும், போட்டியும் பூசலும் மலிந்து கிடப்பதையும் யாரும் மறுக்க முடியாது. சமூகம், குமுறும் எரிமலையாகிக் மறைத்துப் பயனில்லை. கிடப்பதை சமூகத்தின் கட்டுக்கோப்பு, நிலை குலையக் கூடிய அளவுக்கு, வகுப்பு, நிலைமையில் வித்தியாசம், நினைப்பில் வித்தியாசம் இருக்கிறது - இதனையும் யாரும் மறுக்கத் துணிய மாட்டார்கள்.

20


20