உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ஆங்கிலேயர் நுழைந்தனர். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்குபோல வந்த ஆங்கி லேயர்களுக்கு, ஆரியம் வரவேற்பு கூறியது. கண்ணும் கருத்தும் நல்ல நிலையில் இருந்தவர்கள் அவர்கள் தானே? ஊரின் தன்மையை ஊமையிடமா கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்? விழிப்பாக இருந்தவர்கள் வெள்ளைய ரோடு உறவாடி, வெள்ளையர் ஆட்சியால் விளைந்த நன்மைகள் பலவற்றையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். அரசாங்க அலுவல் அகம் அனைத்தும் அந்தக் கூட் டத்தின் பாசறையாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு குள் அவர்கள் கூறிய அறிவுரை'யின் படியே ஆங்கிலே யர்களும் ஆட்சி நடத்தி வந்தனர். இதற்கான ஆதாரங் கள் பல உண்டு வரலாற்றுச் சுவடியிலே.காந்தியாரைக் கைது செய்ய மந்திராலோசனை கூறியவர் காலம் சென் மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்தான் என்பதை எப்படி மறந்துவிட முடியும்? காசிராஜனையும் ராஜகோபாலனை யும் தூக்கிலிட வேண்டுமெனத் திறமையாக வாதிட வில்லை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று வாதிட முடியுமா? தேசீய உணர்ச்சியோ ஏகாதிபத்திய மோகமோ இது? ஆங்கிலேயனுக்கு இருந்த மனிதப் பண்பு, கிரிமினல் குற்றத்துக்காக ஜாதி வித்தியாசம் காட்டி, குலத்துக் கொரு நீதி போதித்த மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஆனால் சிவில் சட்டமான இந்து லா மட்டும்

40


40