உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை


இன்ஜினீயரிங் காலேஜ்களில் கிறிஸ்தவ மாணவர்கள் 10.4 சத விகிதத்தினரென்றால் பிராமணர் 25 சத விகிதத்தினர்.

காலேஜ்களில் மாணவர்களை சேர்க்கும் விஷயத்தில் வாஸ்தவத்தில் இப்பொழுது இருந்து வரும் நிலைமை என்ன என்பது மாத்திரமே இக்கட்டுரையில் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. தங்களுடைய ஜனத்தொகைக்கு அதிகமாக அதுவும் மிதமிஞ்சிபார் அனுபவிக்கிறார்கள் என்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ளலாம். இந்த உண்மை விவரங்களையெல்லாம் அறிந்த பிறகும்கூட, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு படிக்கக்கூட உரிமை மறுக்கப்படுகிறது என்று யாராவது கூச்சல் போடுவார்களானால் அப்படிப் பட்டவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தான் தோன்றும். "இந்த ராஜ்யத்தில் 97.3 சதவிகிதத்தினராக இருக்கும் மக்களுக்கு, அவர்களுடைய மேல் படிப்புக்கு இன்னும் எவ்வளவு குறைந்த இடம் அளித்தால் போதுமென்று நினைக்கிறீர்கள்? பிராமணர்களுக்கு மேல் படிப்பு வசதி மறுக்கப்படுகிறதென்று கூப்பாடு போடுபவர்களை இந்த ஏடுதான் இனிக் கேட்கவேண்டும்.



89