பக்கம்:பொன் விலங்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பொன் விலங்கு

'கண்ணாயிரத்தோடு முன்னால் உட்கார்ந்து போகிறவர் உன் தந்தை மாதிரி இல்லை? நீ அந்தக் காரைக் கவனித்தாயா, சத்யம்?" என்று குமரப்பன் வேறு அவனைக் கேட்டுவிட்டான்.

"பார்த்தேன், அப்பா மாதிரித்தான் இருக்கிறது" என்று அந்த உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையோடு ஏற்றுக்கொண்டு நலிந்த குரலில் குமரப்பனுக்கு மறுமொழி கூறினான் சத்தியமூர்த்தி. என்ன காரியத்துக்காக அப்போது கண்ணாயிரத்தோடு அப்பா புறப்பட்டுப் போகிறார்?' என்று சிந்தித்தது அவன் மனம். தன்னைக் கலந்து கொள்ளாமல் கண்ணாயிரத்தின் மூலம் தன்னுடைய வேலைக்குத் தந்தை தாறுமாறாக ஏதேனும் ஏற்பாடு செய்துவிடப் போகிறாரோ என்று எண்ணியபோது அவன் மிகவும் மனம் கலங்கினான். மேலமாசி வீதியில் குமரப்பனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டுத் தனியே தன் வீட்டை நோக்கி நடந்தபோதும் இதே கலக்கம்தான் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது.

米 ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையா யிருப்பதில் தவறில்லை.

ok

'கண்ணாயிரத்தைப் போல்

கெட்டவர்கள் நன்றாக வாழ்வதற்கும் அப்பாவைப்போல் நல்லவர்கள் - எப்போதுமே மாறாத நல்லவர்கள் - இப்படி வாழமுடியாமற் போவதற்கும் சமூகக் காரணம் ஏதாவது இருக்க முடியுமா? என்று சிந்தித்தபடியே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, திருவள்ளு வரைப் போன்ற பேரறிஞர்களுக்கே இந்தச் சிந்தனை விடை காண்முடியாத புதிராகத்தான் இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/146&oldid=595093" இலிருந்து மீள்விக்கப்பட்டது