பக்கம்:பொன் விலங்கு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 515

"உதவி வார்டனாவது, மண்ணாங்கட்டியாவது? நான் ஒருத்தன் 'வார்டன்' என்று இங்கே பட்டத்தைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்போது நீ அங்கே ஏன்போகணும்?' என்று வார்டன் ஆத்திரத்தோடு கூப்பாடு போட்டதாக அந்த மாணவன் வந்து தெரிவித்தபோது சத்தியமூர்த்தியின் மனம் எல்லாக் கட்டுப்பாடு களையும் மீறிப் பொறுமையிழந்து தவித்தது. பொறுமையோடு தன்னடக்கமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள முயன்றான் அவன். தக்காளிப்பழத்தின் மொத்தமான தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தில் இருக்கிற சின்னஞ் சிறு பச்சை நிறத்தை எடுத்துக்காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் சொந்த அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாக இருப்பதை இந்த நிகழ்ச்சியாலும் சத்தியமூர்த்தி புரிந்துகொள்ள முடிந்தது. வார்டனைச் சந்தித்து விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு அன்று விடுமுறை நாளாகையால் அந்தப் பையனையும் உடன் அழைத்துக்கொண்டு வார்டனுடைய வீட்டுக்குச் சென்றான்சத்தியமூர்த்தி வார்டன் மிகக்கடுமையாயிருந்தார்.வீட்டுப் படியேறி வருகிற சக ஆசிரியனை வரவேற்று ஒரு நாகரிகத்துக்காக மலர வேண்டிய முகமலர்ச்சிகூட அவரிடம் இல்லை. உடன் வந்த மாணவன் வெளியே வாசற்புறமே நின்றுகொண்டு விட்டதனால் சத்தியமூர்த்தி மட்டுமே வார்டனுடைய வீட்டுக்குள்ளே சென்றான். ஆனால் வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்த வார்டன், சத்தியமூர்த்தி அந்த மாணவனை உடனழைத்துக்கொண்டு வருவதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டார். இதனால் சத்தியமூர்த்தி உள்ளே படியேறி வந்ததுமே,"மிஸ்டர் சத்தியமூர்த்தி இதில் எல்லாம் நீங்கள் "இன்டர்ஃபியர் செய்வது (தலையிடுவது) சிறிதும் நன்றாயில்லை. கடுமையா யிருந்தாலொழிய இந்தக் காலத்தில் மாணவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியாது." என்று அவன்வந்த காரியத்தைப் பற்றிப்பேசுவதற்கே இடம்கொடுக்காதவராகப் பிடிவாதமாயிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/317&oldid=595471" இலிருந்து மீள்விக்கப்பட்டது