பக்கம்:பொன் விலங்கு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 397

ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சோஷல் சர்வீஸ் லீக் என்று ஒருசிங்கம் இருந்த்து அதில் உள்ள மாணவ மாணவிகளை அக்கம் பக்கத்துச்சிற்றுர்களுக்கு அழைத்துச் சென்று சாலைகள் போடுதல், வைத்திய உதவி செய்தல், சமூகநலம், கிராம முன்னேற்றம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வதற்காக ஒர்க் காம்ப் பணி முகாம் ஒன்றை ஏற்பாடு பண்ணவேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறை பன்னிரண்டு நாட்களுக்குக் குறையாமல் இருந்ததென்றால், அதன்தொடக்கத்தில் ஒருவாரம்சமூகசேவைக்காக ஓர்ஒர்க்காம்ப் போகவேண்டியிருந்தது. ஒர்க்காம்ப் போகும்போது கிராமத்துக் குழந்தைகளுக்குக் கரைத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த 'பால்பவுடர் டின்கள் சத்தியமூர்த்தியின் உதவி வார்டன் அறையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கல்லூரி சோஷல் சர்வீஸ் லீக்' தலைவராக வேறொரு முதிய பேராசிரியர் இருந்தார். மாணவர்களின் சமூக சேவை முகாமை விடுமுறையின்போது எந்தக் கிராமத்தில் அமைக்கலாம், எத்தனை நாட்கள் அமைக்கலாம் என்று கலந்து பேசுவதற்காக அன்று மாலை அந்தப் பேராசிரியருடைய வீட்டிற்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. பேராசிரியருக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுப் பக்கம். அதனால்தானோ என்னவோ அந்த மனிதர் முக்கால்வாசி நேரம் சமையலைப்பற்றியும் சாப்பாட்டில் உள்ள சுசி ருசிகளைப் பற்றியுமே சுவைத்துப் பேசிக்கொண்டிருப்பார். சேர்ந்தாற்போல அவர் வாயலுக்காமல் ஒன்றரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பேசுவதற்கு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமானால், அவியலைப் பற்றியோ, வறுவலைப் பற்றியோஆரம்பித்துவைக்கவேண்டும். மாணவர்களில் சிலர் அந்தப் பேராசிரியருக்கு மலையாளத்து அவியல் என்றே பெயர் சூட்டியிருந்தார்கள், ஓய்! பாலக்காடுவர்மாகபேயில் இரண்டு கரண்டி அவியல்சாப்பிடுவதற்குப்புண்ணியம் செய்திருக்கவேண்டும் ஐயா!! என்று எவரிடமாவது ஒருநாளைக்கு ஒருதரமேனும்பாலக்காடு'வர்மா கபே'யைப் பற்றிச் சொல்லாவிட்டால் அவருடைய மண்டை வெடித்துப்போகும். இந்த விநோதப் பிரகிருதியைச் சந்திப்பதற்காகச் சத்தியமூர்த்தி அவருடைய வீட்டுக்குப்போயிருந்தபோது ஒரு கிளாஸ் நிறையப் பலாப்பழப் பாயசத்தையும், நேந்திரங்காய் வறுவலையும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் செய்தார். அன்று ஏதோ பண்டிகை நாளாம். மாலையில் சத்தியமூர்த்தி வரப்போகிறானென்று அவனுக்காகவே ஒரு கிளாஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/399&oldid=595639" இலிருந்து மீள்விக்கப்பட்டது