பக்கம்:பொன் விலங்கு.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 401

என்று விதிக்கப்பட்டிருந்தது. ஹாஸ்டல் விதிகள் அடங்கிய விண்ணப்பத்தில் ஒவ்வொரு மாணவனும் அவனுக்குப்பொறுப்பாகப் பெற்றோரோ கார்டியனோ சேர்ந்தும், கையொப்பமிட்டிருப்பதனால் விதிகளை மீறும் மாணவனைக் கடுமையாக விசாரிக்கவும் தண்டிக்கவும் நியாயமிருந்தது. இப்படியெல்லாம் கண்டிப்பான விதிகளிருந்தும் பரீட்சைக்குச் சில நாட்களே இருக்கும் அந்தச் சமயத்தில்கூட உள்ளே இருந்து படிக்கிறாற் போலத் தோன்றுமாறு அறை விளக்குகளைப் போட்டுவிட்டுப் பின் பக்கத்துப் பாத்ரும் குழாய் வழியாகத் தொற்றிக்கொண்டு கீழிறங்கிச் சுவரேறிக் குதித்து இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். இந்தச் செய்தியை சத்தியமூர்த்தி அறிந்துகொண்டபின் இதை எப்பாடுபட்டாவதுதடுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதிசெய்து கொண்டான். வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டித் தங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு பையன் படிக்கிறான் என்ற நம்பிக்கையில் மாதம் தவறாமல் படிப்புக்கும் செலவுக்கும் பணம் அனுப்புகிற அப்பாவிப் பெற்றோர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிற பொறுப்பு வார்டனுக்கும் உதவி வார்டனாகிய தனக்குமே இருப்பதாக அவன் உணர்ந்தான். எனவே அன்று மாலையில் அவன்வார்டனைச்சந்தித்து, "சார், நீங்களும் வாருங்கள், நன்றாக இருட்டியபின்பு ஆளுக்கொரு டார்ச் லைட்டோடு புறப்பட்டுப்போய் ஹாஸ்டலின் பின்புறத்துச் சுவரருகே பதுங்கியிருந்து தவறு செய்கிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம். நிலைமையை இப்படியே வளர விடுவது ஹாஸ்டல் கட்டுப்பாட்டையே பாழாக்கி விடும்' என்று சொல்லிக் கூப்பிட்டான். வார்டன் அதற்குக் கூறிய பதில் பொறுப்பற்றதாகவும் தட்டிக் கழிப்பதாகவும் இருந்தது.

'இதையெல்லாம் கண்டும் காணாதது மாதிரி இருந்துவிட வேண்டும். ஒரு நிலைமை வரைதான் நாம் கண்காணிக்க முடியும். அதற்காக வாட்ச்மேன் செய்கிற வேலையெல்லாம் நாம் செய்ய முடியாது. இராத்துக்கம் விழித்து டார்ச்லைட்டும் கையுமாக காலேஜ் ஹாஸ்டல் காம்பவுண்டுச் சுவர்களைச் சுற்றி வருவதற்கு நாம் பாராக்காரர்களாஅல்லது ரோந்து சுற்றுகிறவர்களா? பூச்சி பொட்டுகள் நடமாடுகிற இடம். நான் அங்கெல்லாம் இரவில்வரமுடியாது" என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில் கூறி விட்டார் வார்டன், முந்திய தினம் கல்லூரி சோஷல் செர்வீஸ் லீக் நியாயமாக இயங்க வேண்டும் என்று

பொ. வி - 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/403&oldid=595645" இலிருந்து மீள்விக்கப்பட்டது