பக்கம்:பொன் விலங்கு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 - பொன் விலங்கு

போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து நமக்குக் கவலையாக இருக்கிறது' என்று உருக்கமாகப் பேசத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் பேசிக் கொண்டிருந்த போது கூட்டம் எழுதி

வைத்த பாடம்போல அமைதியாயிருந்தது. உணர்ச்சி மிக்க அந்தச் சொற்பொழிவில் மனம் நெகிழ்ந்து சில மாணவர்கள் கண்கலங்கி

விட்டார்கள். சத்தியமூர்த்தி, தனக்கும் பூபதிக்கும் உள்ள நேரடிப்

பழக்க வழக்கங்களைப் பற்றியோ, தன்மேல் அவருக்கு அதிகப்

பிரியம் உண்டு என்பதைப் பற்றியோ-எதுவுமே பேசவில்லை.

அப்படியிருந்தும் கூட்டம் முடிந்து, அறைக்குத் திரும்பிக்

கொண்டிருந்தபோது "இவனிடம் அவருக்குக் கொள்ளைப் பிரியம்

இவனைத் திடீரென்று உதவி வார்டனாக்கினார். அடிக்கடி

கூப்பிட்டுப் பிரியமாகப் பேசினார். இவனுடைய விரிவுரை

ஒன்றைக் கேட்டுவிட்டு ஆகா ஊகூ என்று கொண்டாடினார்.

அப்படி எல்லாம் தன்னைத் தனி அக்கறையோடு கவனித்தவரை

இவன் ஏன் புகழமாட்டான்?" என்று புறம் பேசிக்கொண்டு போன

சில ஆசிரியர்களின் வம்புப் பேச்சைச் சத்தியமூர்த்தி தானே கேட்டு

மனம் வருந்தினான். பாரதியும், ஜமீன்தாரும், இன்னும் இரண்டு

மூன்று நாட்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடலாம் என்றும், பாரதி திரும்பி வந்தபின் எல்லா ஆசிரியர்களும் ஒரு முறைக்காக

அவளை வீடு தேடிப் போய்த் துக்கம் கேட்டுவிட்டு

வரவேண்டுமென்றும் முதல்வர் கூறியிருந்தார். அடுத்த வாரம்

நடைபெற இருக்கும் கல்லூரி நிர்வாகக் குழுவின் அவசரக்

கூட்டத்தில் காலேஜ் போர்டின் புதிய தலைவர்

தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைப் பற்றியும் ஆசிரியர்கள்

தங்களுக்குள் பரவலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். -

45

}: ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக் கதை உண்டு. அது கதையாக வெளிப் படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அனுபவம் ஒன்று நஷ்டமாகி விடுகிறது.

>k -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/498&oldid=595749" இலிருந்து மீள்விக்கப்பட்டது