பக்கம்:பொன் விலங்கு.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 பொன் விலங்கு

சொல்லியபோது தந்தையின் முகம் கோபத்தினால் சிவந்து உதடுகள் துடித்தன. மீசை ஆடியது. அவனை நோக்கி ஆவேசமாகக் கூப்பாடு போட்டுக்கொண்டே அவர் திரும்பினார்.

"இனிமே உனக்கும் எனக்கும் என்னடா இருக்கு? மகனாவது ஒண்ணாவது? ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்லைன்னா நீ என்னடா மனுசன் உன் முகத்திலே முழிக்கிறதே பாவம் மானம் மரியாதை இருந்தா இனிமே ஊர்ப்பக்கம் வீட்டுப் பக்கம் என்னைப் பார்க்க வராதே! உன்னைப் பெத்ததகப்பனின்னு நானும் வேலயத்துப்போயி இங்கே தேடி வந்தேனே?' என்று காறித் துப்பிவிட்டு அதே வேகத்தோடு படியிறங்கினார் அவனுடைய தந்தை. சத்தியமூர்த்தி அப்போது அவரைத் தடுக்கவில்லை. அவர் நின்று நிதானித்துப் பேசுகிற சுய புத்தியோடு வரவில்லை என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. நியாயம் அவன் பக்கம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஜமீன்தாருக்கே அடிபணிய வேண்டுமென்ற தந்தையின் பயத்தை அவன் வெறுத்தான். தந்தை தன்னுடைய பக்கத்திலிருந்த நியாயத்தை அறியாமலோ அறிய விரும்பாமலோ அல்லது அறிய மனம் இல்லாமலோ-பிடிவாதம் பிடித்ததைக் கண்டு அவனால் பொறுமையோடு இருக்க முடியவில்லை. அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமைதான் மிகமிக இழிவு' என்று ஒரு தத்துவ ஞானி சொல்லியிருப்பதை இப்போது நினைத்தான் அவன். தந்தை தன் பக்கத்து நியாயத்தை அறிய மனமில்லாமலே புறக்கணித்துத் தனக்கே குழி பறிக்கத் துணையாகவும், சான்றாகவும் ஆகிற ஒரு தாளில் தன்னைக் கையொப்பமிடத் தூண்டிப் பிடிவாதம் பிடித்ததைக் கண்டு பொறுமை இழந்த அவன் அதைச்சுக்கு நூறாகக் கிழித்தெறிந்ததைக் கண்டு அவர் ஆத்திரப்பட்டு விட்டார். அந்த ஆத்திரத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிவிட்டுப் போய்விட்டார். அதற்காகவும் சத்தியமூர்த்தி கவலைப்படவில்லை. ஒரு நிலைமைக்கு மேல் போய்விட்டால் அப்புறம் கவலைகள்தான் மெய்யான நண்பர்களாகி விடுகின்றன. அவற்றைப்போல் சிந்தனைக்குச் சக்தியூட்டுவதற்கு வேறெவற்றாலும் முடிவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களை ஏமாற்றிவிட்டு அவன் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/572&oldid=595831" இலிருந்து மீள்விக்கப்பட்டது