பக்கம்:பொன் விலங்கு.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 625

கண்ணாயிரத்தைக் கூப்பிட்டனுப்பினாள். கண்ணாயிரம் மிகவும் திமிராக நடந்து வந்தார். அவரிடம் அந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதைக் கூடத்தில் யார் மாட்டியதென்று அவள் கடுமையான கோபத்தோடு விசாரித்தபோது அவர் வஞ்சகமான விஷமச்சிரிப்புச்சிரித்துக்கொண்டே 'நேற்றுவரை அந்தப்படத்தை ஜமீன்தார் படுத்திருந்த அறையில்தான் மாட்டியிருந்தார். இன்று மாலையில்தான் ஜமீன்தாரே என்னைக் கூப்பிட்டு 'கண்ணாயிரம்! இன்னிக்குச் சாயங்காலம் இங்கே ரொம்ப முக்கியமான விருந்தாளி ஒருத்தர் பாரதியைப் பார்க்க வரப்போறாரு. அவரு இந்தப் படத்தையும் பார்க்க வேண்டியது.ரொம்ப ரொம்ப அவசியம். இன்னிக்கு மட்டும் இதை அங்கே கூடத்திலே மாட்டிவை என்று சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அதனால்தான் இங்கே கொண்டாந்து மாட்டினேன்' என்று கூறியபோதுதான் பகலில் மகேசுவரி தங்கரத்தினமும் நானும் டெலிபோனில் பேசியதை ஜமீன்தார் முன்புறம் தமது அறையிலுள்ள எக்ஸ்டென்ஷனிலிருந்து இரகசியமாக ஓவர்ஹியர் செய்திருக்கிறாரென்று பாரதியால் அநுமானம் பண்ண முடிந்தது. உள்பகுதியிலும் முன் அறையிலுமாக அந்த வீட்டில் இருந்த ஒரே எண்ணுக்குரிய இரண்டு டெலிபோன் ரெnவர்களில் ஒன்றைக் கையிலெடுத்தால் இன்னொன்றில் மற்றொருவர்பேசிக்கொண்டிருப்பதைக்கேட்கமுடியும் என்பதைப் பாரதியும் அறிவாள். ஜமீன்தாரும், கண்ணாயிரமும் செய்திருக்கிற அநியாயங்களை நினைத்தபோது அவளுடைய வயிறெரிந்தது. அவர்களை எண்ணியபோதே வெல் டிரஸ்டு ரோக்ஸ்’ என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் பாரதி. அக்கிரமமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை மாட்டியிருந்த இடத்திலிருந்து வெளியில் எடுத்தெறியச் சொல்ல வேண்டும் போல மனம் குமுறினாள் அவள். மோகினியின் பரிசுத்தமான காதலை ஒப்புக்கொண்டு தன்னுடைய ஆசையைத் தனக்குள்ளேயே பெருந்தன்மையாகத் தியாகம் செய்து கொண்டிருந்தாள் பாரதி. ஆனால், இப்போது தானே ஒப்பி மகிழ்ந்த மோகினியின் காதலுக்குக் கூட கெடுதல் வருவதை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. - - -

கவலைப்படாதீர்கள் அக்கா நீங்கள் பாக்கியசாலி என்று நான் சொல்லிய வார்த்தையை எப்படியும் இறுதிவரை நிரூபிப்பது

பொ.வி - 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/627&oldid=595892" இலிருந்து மீள்விக்கப்பட்டது