பக்கம்:பொன் விலங்கு.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 பொன் விலங்கு

மோகினி பதில் சொல்லாமல் தலைகுனிந்து கண்ணிர் சிந்தினாள். ஜமீன்தாரும் கண்ணாயிரமும் கூச்சமின்றியும், பச்சையாகவும் தன்னைப் பேசிய வசைப் பேச்சுக்களையெல்லாம் அப்படியே கூட்டியோ குறைத்தோ பாரதியிடம் சொன்னால் அவள் மனம் கூட வேறுபடும் என்பதால் மோகினி அவற்றை அவளிடம் சொல்லவேயில்லை. *

“நாமெல்லாம் இப்படி அஞ்சி அழுது பயனில்லை அக்கா! தைரியமாக நம்மைத் துன்புறுத்துகிறவர்களைப் பதிலுக்கு அழ வைக்க வேண்டும்..."

"அதையும் ஒருநாள் செய்யத்தான் போகிறேன்' என்று எந்த அர்த்தத்திலோ பதில் கூறினாள் மோகினி. ஆனால் அந்த அர்த்தம் பாரதிக்குச் சரியாய்ப் புரிந்திருக்க முடியாது. மறுநாள் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலை விட்டுப் புறப்படுவதாக இருந்தது. மனத்தில் தனக்குத்தானே பெருந்தன்மையாக ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியை மறுநாள் அதிகாலையில் சந்தித்து, மதுரைக்கு அனுப்பிய கடிதத்தைப் பற்றி விசாரித்த பின், "என் வார்த்தைக்குத் தயவுசெய்து செவிசாயுங்கள் சார் மோகினியைப் போன்ற அழகிய அநாதைகளைச் சமூகம் எந்த நிலையில் வைத்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். வீண் சந்தேகங்களுக்கு இரையாகி அவளைக் கைவிட்டு விடாதீர்கள். அவளைப் போல் புனிதமான பெண் வேறொருத்தி இந்த உலகில் இருக்கமாட்டாள். நீங்கள் மேற்கு ஜெர்மனிக்குப் புறப்படுமுன் கடவுள் சாட்சியாக ஒரு காரியம் செய்யுங்கள். நீங்கள் தைரியமுள்ளவர். முற்போக்குவாதி. இதற்குத் தயங்கவேண்டிய அவசியமேயில்லை! எங்கள் வீட்டுக் காரில் நானே நம்பிக்கையான டிரைவருடன் உங்களையும் மோகினியையும் மதுரைக்கு ஏற்றி அனுப்புகிறேன். மதுரைக்குப் போய் ரிஜிஸ்தர் ஆபீஸில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு திருப்பரங்குன்றம் கோவிலில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு உங்கள் மனைவி என்ற சட்டபூர்வமான அங்கீகாரத்தோடு மோகினியை மறுபடி என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு நீங்கள் அப்புறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/666&oldid=595935" இலிருந்து மீள்விக்கப்பட்டது