பக்கம்:பொன் விலங்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 97

முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது அவனுக்கு வெளியில் எங்கேயும் போகப் பிடிக்காமல் வீட்டுக்குள் இருப்பதும் வேதனையாக மறுபடியும் தன் மேலேயே வெறுப்புப் பிறந்தது அவனுக்கு எப்படியெப்படியோ உயர்ந்த இலட்சியங் களோடு வாழவேண்டும் என்ற ஆசையும் அப்படியெல்லாம் வாழமுடியாத வறுமையையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இந்த நாட்டு மத்திய தரக் குடும்பத்து இளைஞர்கள் பலர் இயல்பாக அடையும் மணவாட்டத்தை அப்போது அவனும் அடைந்தான். வாழ்க்கையும் அதன் நீதி நியாயங்களும் ஏதோ ஒரு காரணத்தால் வெறுப்புக்குரியனவாக அமைந்து விட்டாற்போல் எண்ணி எண்ணிப் புழுங்கினான் சத்தியமூர்த்தி.

அப்பாவைப்போல் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாகப் பள்ளி ஆசிரியராக இருந்து வறுமையால் மனமும் உடலும் தேய்ந்தவர்களைப் பற்றி ஒரு புறமும், கண்ணாயிரத்தைப்போல் குறுக்கு வழியில் தாவி ஓடி முன்னுக்கு வந்து பிரமுகராகி விட்டவர்களைப்பற்றி ஒரு புறமுமாகச்சத்தியமூர்த்தியின் மனத்தில் எண்ணங்கள் மோதின. வாழ்க்கையாகிய பந்தயத்தில் பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள் முன்னால் ஒடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் இதயம் கொதித்தது அவனுக்கு. இப்படி மனம் தவிக்கும் வேளைகளில் சக்தி வாய்ந்த கருத்துக்களைச் சொல்லும் நூல்கள் எவற்றையாவது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுவது சத்தியமூர்த்தியின் வழக்கம். இன்றும் அவனுக்கு அப்படியே தோன்றியது.அப்பாவுக்கும் அவனுக்கும் காப்பியை எடுத்துக் கொண்டுவந்து வைத்தாளகல்யாணி, காப்பியைக் குடித்துவிட்டுப் புத்தக அலமாரியிலிருந்து சுவாமி-விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் உபதேச மொழிகளும் அட்ங்கிய தொகுதி ஒன்றை எடுத்தான் சத்தியமூர்த்தி. எடுத்த எடுப்பில் அவன் கைகள்அந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தைப் பிரித்தனவோ அந்தப் பக்கத்திலேயே சற்றுமுன் அவன் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை விளக்கப்பட்டிருந்தது. .

பொ. வி - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/99&oldid=595995" இலிருந்து மீள்விக்கப்பட்டது