108 பொய்ம் முகங்கள் போயிடுங்க. -என்று சுதர்சனனுக்கு ஒர் இலவச அறிவுரையும் கூறினார். - - - எனக்கு இவங்ககிட்டே வேலை பார்த்து ஆகனும் கிறது இல்லே. ஆனால் nரியஸ் மிஸ் காண்டக்ட்டி னாலே தான் நான் வெளியேற்றப்பட்டேன்னு அவங்க புளுகியிருக்கிற புளுகை மட்டும் நான் அப்படியே ஒத்துக் கிட்டுப் போகத் தயாராயில்லே சார்'-என்றான் சுதர் சனன், '. 11 மன்றக்குடி மகபதி அடிகள்ார்-பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில்-முதல் வரிசையில் மேடைக்கு எதிராக அமர்ந்திருக்கும் ஆசிரியர்களிடையே தன்னைத் தேடக் கூடும் என்று தோன்றியது சுதர்சனனுக்கு. பழகிய தன் முகத்தை ஒவ்வொரு கணமும் அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தின் இடையே துழாவிக்கொண்டிருக்கும் என்பது வக்கீல் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் அவனுக்குக் குறிப்பாக ஞாபகம் இருந்தது. வக்கீல் ராமாநுஜாச்சாரி ஒரு விஷயத்தை மிகவும் கொச்சையாக விசாரித்தார். அடிகளின் சொற்பொழிவு பற்றிய அவன் சிந்தனை அவரது விசாரணையால் கலைந்து விட்டது. 'நீரும் நாயுடு ஸ்கூல் நடத்தறவாளும் நாயுடு. அப்படி யிருந்தும் உங்களுக்குள்ளே எப்பிடி இந்தத் தகராறெல்லாம் `... "தகராறு வர்ரதுக்குக் காரணமான எந்தத் தப்பை யும் நான் பண்ணலே சார்! இது அது கார ஆணவத்துக்கும். ஒரு தனிமனிதனின் சுயமரியாதைக்கும் நடக்கிற யுத்தம்' இதிலே என்னை அறவே நசுக்கப் பார்க்கிறாங்க."
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/110
Appearance