நா. பார்த்தசாரதி 147 யார் மூலமோ தலைகீழா நின்னு செலவழிச்சு முயற்சி பண்ணினாங்க. நடக்கலே, பலவேசமும் அவர் பப்ளிஷரும் எங்கெங்கேயோ போனாங்க. யார் யாரையோ பார்த் தாங்க. ஊஹல்ம், நடக்குமா? நடக்கலே. கடைசியிலே சசிதம்பரநாதா! நீயே கதி"ன்னு நம்ப கால்லே வந்து விழுந் தாங்க. அடுத்த நாளே போர்ட் மீட்டிங்கிலே காரியம் லக்ஸ்ஸ்ஃபுல்லா முடிஞ்சி போச்சு.' "யூனிவர்ஸிடி சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும் நீங்க ஒரு பெரிய "லயலான்’ ஆக இருக்கீங்கன்னு சொல் லுங்க." - - - கரெக்டாச் சொன்னிங்க. நல்லவங்களுக்கு உபகாரம் பண்றதே ஒரு சந்தோஷம்... அதைத்தான் கடந்த கால் நூற் றாண்டாகப் பண்ணிக்கிட்டிருக்கேன்.” - நீங்க சொல்றதெல்லாம் கேட்டா ரொம்ப சுவா ரஸ்யமா இருக்குங்க...' - ரகுவும் நானும் உயிர்ச் சிநேகிதம். எப்ப நான் படி யேறி வந்தாலும் கீழே டிக்கடைக்குச் சொல்லியனுப்பி சிண்டிகேட் சார் வந்திருக்காரு. ஸ்ட்ராங்கா ஒரு டி. கொண்டு வா'ன்னுடுவான். என் . மேலே ரகுவுக்குக் கொள்ளைப் பிரியம். ரகு மட்டுமில்லே. காலேஜ் கரெஸ் பாண்டெண்டுகள், பிரின்ஸிபால்கள், எல்லாருமே சிண்டி கேட் சிதம்பரநாதன்னா உயிரை விட்டுடுவாங்க...' "டீக்குச் சொல்லி அனுப்பட்டுங்களா? நான் புதிசு. எனக்கு இங்கே உக்கடைக்காரங்க யாரையும் தெரியாது! நாமபோயே குடிச்சுட்டு வந்துடலாமா?' என்று பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிய சுதர்சனனைத் தடுத்து, "நீங்க உட்காருங்க் நானே உக்கடைப் பையனைக் கூப்பிடறேன். ரகுவோட அக்கவுண்ட்லேயே அவன் டீ கொண்டு வருவான்' என்று கூறி விட்டு மாடி முகப்புக்கு எழுந்திருந்து போய்த் தாம்ே டீக்கடைப் பையனுக்குக் குர்ல் கொடுத்தார் சிதம்பரநாதன்.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/149
Appearance